அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்.4-ல் கமலா ஹாரிஸுடன் விவாதம் நடத்த ட்ரம்ப் சம்மதம்

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் உடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக … Read more

இஸ்ரேல் பாதுகாப்புக்காக கூடுதல் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹொதிஸ் ஆகியவற்றின் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான தமது ராணுவ பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். முன்னதாக செவ்வாயன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா … Read more

ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் கமலா ஹாரிஸ்: அடுத்த வாரம் வேட்புமனுவை ஏற்கிறார்

புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த வாரம் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வேன்” என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் … Read more

ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்

டெஹ்ரான்: ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவர் ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சமீபத்தில் ஈரான் சென்றிருந்தார். விழாவில் பங்கேற்ற பிறகு, வடக்கு டெஹ்ரானில் ஈரான் ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள ‘நெசாத்’ என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். ஈரான் … Read more

'இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் உலகிற்கே ஆபத்து' – ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதி மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்து என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அலி பாகரி கனி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- “கடந்த பத்து மாதங்களில், இஸ்ரேல் காசா … Read more

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் பலி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சீனாடவுன் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் பற்றிய தீ மளமளவென கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைந்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் 11 பேர் … Read more

'ஸ்மார்ட்போன் மூலம் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' – ஐ.நா. தலைவர்

நியூயார்க், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களால் ஸ்மார்ட்போன் மூலம் விரைவாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடிகிறது என ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையின் 78-வது அமர்வில் அவர் பேசியதாவது;- “டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால், கடந்த 5-6 ஆண்டுகளில் வெறும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் அங்கு சுமார் 80 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். வங்கி அமைப்புடன் ஒருபோதும் … Read more

அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம்

வாஷிங்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷியா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல், ரஷியா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நார்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷியா, பெலாரஸ் கைது செய்து … Read more

வயநாடு நிலச்சரிவு: ஜோ பைடன் இரங்கல்

வாஷிங்டன், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை … Read more

ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும்: பைடன் உறுதி

வாஷிங்டன்: ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி அறிவித்தார். இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. Source link