வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி.. எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

காரகஸ்: வெனிசூலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 8 பேர் களத்தில் இருந்தனர். எனினும் நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, வாய்ப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறும் மக்கள், அரசுக்கு எதிரான அதிருப்தி அலை ஆகிய அம்சங்கள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. வெளிநாடுகளில் … Read more

தைவானில் சர்வதேச மாநாடு : 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

தைபே சிட்டி, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் அடுத்த வாரம் சர்வதேச உச்சிமாநாடு தைவானில் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 10,000 மாணவர்கள், 400 ஆசிரியர்கள் பலி

டெல் அவில்: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் காசா போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மத்திய காசா பகுதியில் உள்ள புரேஜ் மற்றும் நுசிராத் அகதிகள் முகாம்களில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறி வருகின்றனர். 86% காசா மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா … Read more

பாகிஸ்தானில் பழங்குடியின கிராமங்களில் பயங்கர கலவரம்.. 42 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், உப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின பிரிவினரிடையே நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்துள்ளது. இது முற்றிய நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். புசேரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த கலவரம், மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆங்காங்கே பதுங்கு குழிகள் அமைத்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன. இந்த வன்முறை … Read more

3-வது முறையாக வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ தேர்வு – தேர்தல் முடிவுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வெனிசுலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய தேர்தல் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. வெனிசுலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் (Edmundo Gonzalez) களமிறங்கினார். இவர்களுக்கிடையே நேரடி … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 38 பேர் அதிரடி கைது

கராச்சி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு துறையை (சி.டி.டி.) சேர்ந்த போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை நடத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற … Read more

ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்

டெஹ்ரான், காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் வெப்ப அலை காரணமாக அங்கு மின்சார நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள வங்கி, அரசு அலுவலகம் … Read more

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்: பிரபல ஜோதிடர் கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல்போட்டியிலிருந்து ஜோ பைடன்விலகுவார் என அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் எமி டிரிப்துல்லியமாக கணித்திருந்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என எமி டிரிப், நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டிரம்ப் ஜாதகத்தில் சூரியன் உச்சத்தில் இருக்கிறார். … Read more

என்னை தேர்ந்தெடுத்தால்… நீங்கள் இனி எப்போதும் வாக்களிக்க வேண்டியதில்லை – டிரம்ப் பரபரப்பு பிரசாரம்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு (59) தனது முழு ஆதரவை அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்பை முந்தும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தினர். நெருக்கடி அதிகமானதால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக … Read more