ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

சனா, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். எனவே செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் வணிக கப்பல்களும் சேதம் அடைகின்றன. எனவே அந்த வழியாக செல்லும் வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டுப்படையில் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் … Read more

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்; 10 பேர் பலி – உடனடியாக நாடு திரும்புகிறார் நெதன்யாகு

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலயில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், … Read more

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி

டெய்ர் அல்-பலா, இஸ்ரேல் படையினர் காசாவின் மத்திய பகுதியில் வான்வழியே இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், டெய்ர் அல்-பலா பகுதியில் உள்ள மகளிர் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்திருந்த 30 பேர் உயிரிழந்தனர். இதில், காயமடைந்த நபர்கள் நகரில் அல் அக்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, இந்த பள்ளியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் அந்த அமைப்பின் … Read more

பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா – அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்

புதுடெல்லி: சுதந்திரத்துக்கு முன்னதாகவும், அதற்குப் பின்பும் இந்தியாவில் இருந்து பல்வேறு விலைமதிக்க முடியாத பழங்காலப் பொருட்கள்,கலைச் சிற்பங்கள் வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டன. இந்த அரிய பொக்கிஷங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அருங்காட்சியங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பாதுகாப்பில் உள்ளன. 1970-ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டிலிருந்து பழங்கால பொருட்கள், பொக்கிஷங்களை கடத்திச் செல்வது தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 46-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தக் … Read more

‘மலிவு’ பேச்சு ட்ரம்ப் Vs ‘தெளிவு’ உரை கமலா: அமெரிக்க பிரச்சாரக் களம் எப்படி? | HTT Explainer

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ‘முட்டாள், அவர் ஓர் இடதுசாரி பைத்தியம்’ என மலிவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, ‘கமலா ஹாரிஸ் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்காக செயல்படுபவர்’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையை மிகத் தெளிவுடன் அணுகி வருகிறார். கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய … Read more

மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், மெக்சிகோ சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக உள்ளது. அதன்படி மெக்சிகோவை தலைமையிடமாக கொண்டு சினோலோவா கார்டெல் என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவன் ஜம்பாடா அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். எனவே இவர் மீது அமெரிக்காவில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் அவர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.125 கோடி சன்மானம் … Read more

கெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

பீஜிங், தைவானில் உருவான கெய்மி புயலால் அங்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 லட்சம் பேரின் … Read more

பாகிஸ்தானில் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து தோஷகானா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.அதன்பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் (வயது 49) ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதன்படி ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் மற்றும் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட … Read more

அதிபர் வேட்பாளருக்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மாறியிருக்கிறார். கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். “துணை அதிபர் … Read more