‘மம்தாவின் அகதிகள் ஆதரவுப் பேச்சு தீவிரவாதிகளுக்கு உதவக் கூடும்’ – வங்கதேசம் சாடல் 

புதுடெல்லி: மேற்குவங்கத்தின் கதவுகளைத் தட்டும் வங்கதேச அகதிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்தில் ஜுலை 21-ம் தேதி நடந்த தியாகிகள் தின பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்கதேசம் வேறு ஒரு நாடு என்பதால் அதைப் பற்றி நான் பேச முடியாது. அதைப் பற்றி இந்திய அரசு பேசும். ஆனால் அங்குள்ள … Read more

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

லண்டன், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் … Read more

‘ஒன்றும் புரியவில்லை’ – அதிபர் பைடன் உரையை சாடிய ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்தது. “பைடனின் உரையில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. சிலவற்றை தான் புரிந்துகொள்ள முடிந்தது. அது மிகவும் மோசமாக இருந்தது. பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவுக்கு சங்கடம் தருகின்றனர். இது போல ஒரு போதும் … Read more

மைக்ரோசாப்ட் ஊழியர் எனக்கூறி அமெரிக்க பெண்ணிடம் பணமோசடி செய்த இந்தியர் கைது

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணின் கணினியை கடந்த ஆண்டு ஜூலை 4-ந்தேதி மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அந்த கணினியில் தோன்றிய அலைபேசி எண்ணிற்கு லிசா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், தன்னை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த நபர் லிசாவிடம் அவரது வங்கி கணக்கி இருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.3.3 கோடி) பணத்தை … Read more

ட்ரம்பை கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியுமா? – ஒபாமா அப்செட்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதில் அமைதி காத்து வருகிறார். இது குறித்து பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என … Read more

ஜனநாயகத்தை காக்கவே அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினேன்: பைடன் விளக்கம்

வாஷிங்டன்: கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர் விளக்கியுள்ளார். “ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைத்தையும் விட முக்கியமானது. அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அதில் தனிப்பட்ட காரணமும் அடங்கும். நான் இந்த பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகம் நேசிக்கிறேன். இதன் மூலம் … Read more

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்றஅறிவியல் இதழில் வெளியாகிஉள்ளது. அதில் கூறியிருப்பதாவது: புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், … Read more

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 19 பயணிகளுடன் நேற்று காலை பொக்காரா நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று மேலே … Read more

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; 82-வது இடத்தில் இந்தியா!

புதுடெல்லி: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி … Read more

இந்தோனேசியாவில் ரிக்டர் 5.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மானிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தினத்தந்தி Related Tags : Earthquake  நிலநடுக்கம்