முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு; 6 பேர் பலியான சோகம்

ஜாக்ரப், குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி குரோஷிய காவல் தலைவர் நிகோலா மிலினா கூறும்போது, இந்த சம்பவத்தில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஊழியர் ஒருவரும் பலியாகி உள்ளார். மொத்தம் 6 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். இந்த … Read more

கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

எட்மன்டன்: கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் … Read more

வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அபுதாபி, வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வங்காளதேச அரசு தொடுத்த மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனை அடுத்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் … Read more

அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்

அபுதாபி, அபுதாபியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை இருந்து வருகிறது. இதில் அந்த நிறுவனத்தின் விமானம் இன்று அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்டது. மேலே பறந்து கொண்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுதாரித்துகொண்ட விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகி உள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார். … Read more

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காசாவில் இதுவரை 39,000-ஐ தாண்டியது உயிரிழப்பு!

டெல் அவில்: தெற்கு காசாவில் கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேலிய தாக்குதல் 39 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதோடு, பெரும்பாலான பாலஸ்தீனர்கள் கிழக்கு கான் யூனிஸில் இருந்து வெளியேறினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காசாவில் இதுவரையிலான பலி எண்ணிக்கை 39,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று காசா மீதான இஸ்ரேலின் போரில் 39,006 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89,818 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என … Read more

மோடி முதல் ட்ரூடோ வரை: பிரபலங்களின் ஏஐ ஃபேஷன் ஷோ வீடியோவை பகிர்ந்த எலான் மஸ்க்

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார். இதில் பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் அறியப்படும் பிரபலங்களில் ஏஐ அவதார் ஒய்யார நடை போட்டுள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் அசல் எது, போலி எது என்பதை அடையாளம் காண்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. மறுபக்கம் டீப்ஃபேக் அச்சுறுத்தலும் நிலவுகிறது. இந்நிலையில், வேடிக்கையான வகையில் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலக 3 முக்கிய காரணங்கள் | HTT Explainer

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் வேளையில் இறுதிகட்டத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடன் அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோ பைடன் இந்த முடிவு எடுக்க முக்கியமாக இருந்த 3 காரணங்கள் என்னென்ன? 1. ஜோ பைடனின் வயது: “அமெரிக்க அதிபராக … Read more

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ரேஸில் கமலா ஹாரிஸ் – ஒபாமா நிலைப்பாடு என்ன?

சிகாகோ: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரம், வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் கண்டால், தேர்தலில் அவரை வீழ்த்துவது எளிது டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா நிலைப்பாடு … Read more

“இலங்கையில் அதிபர் தேர்தலை ஓர் ஆண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

ராமேசுவரம்: இலங்கையில் அதிபர் தேர்தலை ஓர் ஆண்டுக்கு தாமதப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்று மகிந்த ராஜபக்ச … Read more