வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

டாக்கா: வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக அங்கு வன்முறை நடைபெற்றுவரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல், 24 மணி நேர அவசரகால எண்களையும் அறிவித்துள்ளது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழலைக் கருதத்தில் கொண்டு … Read more

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 75 பேர் மீட்பு

பெய்ஜீங்: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சீனாவிவ் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகர் பகுதியில் 14 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துக்கு அதிகப்படியான மக்கள் வந்துசெல்வது வ்ழக்கம். இந்நிலையில் நேற்று இரவில் (புதன்கிழமை) இங்கு ஒரு மாடியில் இருந்து கரும்புகையுடன் தீ பரவியது. இது குறித்து போலீஸாருக்கும் தகவல் … Read more

ஹா ஹா ஹா…! : ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

மக்கள் பதற்றம், மன அழுத்தத்திலிருந்து விடுபட புதிய சட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் … Read more

“ரஷ்யா உடனான எரிசக்தி உறவால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளது” – செர்கீ லாவ்ரோவ்

ஐக்கியநாடுகள் சபை: ரஷ்யா உடனான எரிசக்தி உறவுகளால் இந்தியா மிகப்பெரிய, முற்றிலும் நியாயமற்ற அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தலைமை வகிக்கும் நிலையில், மாஸ்கோவின் தலைமையின் கீழ் நடைபெறும் கவுன்சிலின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்க செர்கி லாவ்ரோவ் நியூயார்க் வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த செர்கீ லாவ்ரோவ், “இந்தியா ஒரு மிகப் பெரிய சக்தி. அது தனது தேசிய நலன்களின் … Read more

காசா போரை நிறுத்த, நிபந்தனையின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும். ஹமாஸ் தன் வசம் உள்ள பிணைக் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை நடந்த விவாதத்தில் இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது: பாலஸ்தீன வளர்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உதவி செய்து வருகிறது. இதுவரை 120 மில்லியன் டாலர் அளவில் உதவிகளை செய்துள்ளது. கடந்த அக்டோபர் … Read more

ஓமன் மசூதி துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு; 28 பேர் காயம்

மஸ்கட்: கடந்த ஜூலை 15-ம் தேதி (திங்கள்) இரவு, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியாமுஸ்லிம்களுக்கான இமாம் அலிமசூதி அருகில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு துப்பாக்கி சூடுநடத்தியது. இதில் ஒரு இந்தியர், நான்கு பாகிஸ்தானியர்கள், காவல்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின்போது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது … Read more

அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி. குற்றவாளி – கோர்ட்டு அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி. ஆக உள்ளவர் பாப் மெனண்டெஸ் (வயது 70). இவர் எகிப்து, கத்தார் நாட்டுக்கு ராணுவ உதவியை விரைவுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய சில தொழிலதிபர்கள் அவரை அணுகி லஞ்சம் கொடுத்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உரிய ஆவணமின்றி இருந்த 13 தங்கக்கட்டிகள், சொகுசு … Read more

ஏமனில் செங்கடல் வழியாக சென்ற கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சனா, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. அவர்கள் செங்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து கடற்படையினர் தெரிவித்தனர். இதனால் … Read more

இந்தியா எங்களது நெருங்கிய கூட்டாளி: அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன், இந்தியாவை தங்களின் நெருங்கிய கூட்டாளி என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் அதிபர் புதினை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். ரஷியாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மோடியின் இந்த பயணம் அமைந்தது. … Read more

இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி – வைரல் பதிவு

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் … Read more