ஜூலை 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வரும் 21-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என்று ஆளும் சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் தலைமை கொரடா மகேஷ் பர்துலா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திய சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் தலைமை கொரடா மகேஷ் பர்துலா, “அரசியல் சாசன சட்டப்படி, பிரதமராக நியமிக்கப்பட்டவர் 30 நாட்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நாடாளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி … Read more

இன்ஸ்டா போஸ்டில் கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா

துபாய்: துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை, இன்ஸ்டா போஸ்ட் மூலம் விவாகரத்து செய்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். … Read more

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி: அமெரிக்க ஊடகச் செய்தியால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்தச் செய்தியில், “ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. அதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகத் … Read more

என்னுடைய வளர்ச்சிக்கு இந்து மனைவியே முக்கிய காரணம்: ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கருத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் குடியரசுகட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ட்ரம்ப் தன்கட்சி சார்பில் துணை அதிபர்வேட்பாளராக அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸைதேர்ந்தெடுத்துள்ளார். வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி இந்திய வம்சாவளி ஆவார். ஜோ பைடன் அரசின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கும் அவரது … Read more

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாள் முன்பு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற தாமஸ் மேத்யூ: புதிய தகவல்கள் வெளியீடு

வாஷிங்டன்: கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தாமஸ் மேத்யூ என்பவர் ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார், சுதாரித்துக் கொண்டபாதுகாப்புப் படை வீரர்கள், தாமஸ்மேத்யூவை சுட்டுக் கொன்றனர். இந்த … Read more

சவுதி அரேபியாவில்… ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம்; அப்படி என்ன உள்ளது..?

ரியாத், சவுதி அரேபியா நாட்டில் செருப்பு விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடை ஒன்றில் ஒரு ஜோடி செருப்பின் விலை அந்நாட்டு மதிப்பின்படி 4,500 ரியால்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்திய மதிப்பில், இந்த ஜோடி செருப்பின் விலை ரூ.1 லட்சம் ஆகும். ரப்பரில் செய்யப்பட்ட இந்த ஒரு ஜோடி செருப்பு இந்தியர்களின் மத்தியில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாகி இருக்கிறது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. பச்சை, சிவப்பு, நீலம் போன்ற பல வண்ணங்களை பக்கவாட்டில் கொண்ட அந்த … Read more

ஆப்கானிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு

காபுல், ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் உள்ள கின்ஜான் மாவட்டத்தில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 17 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Afghanistan  ஆப்கானிஸ்தான் 

ரோல்ஸ் ராய்ஸ் காரின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளர் குத்திக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பெர்லின், உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ். ஆடம்பர கார்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபுள்யூ கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வடிவமைப்பு குழுவின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டவர் இயன் கெமரூன். இங்கிலாந்தை சேர்ந்த இயன் கெமரூன் பல ஆண்டுகளாக ரோல்ஸ் ராய்ஸ் கார் தலைமை வடிவமைப்பாளராக செயலப்ட்டு வந்தார். பல ஆண்டுகளாக பணியில் இருந்த இவர் பின்னர் பணியில் இருந்து ஓய்வு … Read more

பிரசார நன்கொடை ஊழல் எதிரொலி – வேல்ஸ் அரசின் தலைவர் பதவி விலகல்

லண்டன், பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் அரசாங்கத்தின் தலைவர் வாகன் கெதிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட பிரசார நன்கொடை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து வாகன் கெதிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெல்ஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் விலகும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். அதன் விளைவாக வேல்ஸ் அரசின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்” என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம், … Read more

துபாயில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் நிறுவ ஒப்பந்தம்

துபாய், துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கடுமையான கோடைக்காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை கட்டாய மதிய இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் மூலம் டெலிவரியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்காக நகரின் பல்வேறு இடங்களில் ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்விடங்களில் ஊழியர்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் எந்திரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இது காற்றில் இருந்து தூய்மையான குடிநீர் தயாரிக்கும் வகையில் செயல்படக்கூடியது ஆகும். … Read more