எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா

தாலின், ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் (வயது 47). கடந்த 3½ ஆண்டுகளாக பிரதமராக இருந்த இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்தார். இதனையடுத்து அவரது ராஜினாமா கடிதத்துக்கு அதிபர் அலார் காரிஸ் நேற்று ஒப்புதல் அளித்தார். எனவே புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தினத்தந்தி Related … Read more

இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாக். அரசு முடிவு

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குறிப்பாக, பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா … Read more

துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பியது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியது என்ன?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். … Read more

சோமாலியாவில் சிறை தகர்ப்பு முயற்சி முறியடிப்பு.. 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மொகதிசு, சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள மத்திய சிறையில் உள்ள அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் சிறையை உடைத்து தப்ப முயன்றனர். கையெறி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் சிறையில் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் சிறையில் பெரும் பதற்றமான சூழல் உருவானது. பயங்கரவாதிகளின் சதி குறித்து தெரியவந்ததும் ராணுவ வீரர்கள் உடனடியாக சிறைக்கு விரைந்தனர். அவர்கள் சிறையை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சிறைக்குள் சென்று வன்முறையில் … Read more

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் என்ன? | HTT Explainer

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்? – ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை சில தரவுகள் … Read more

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும். பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், “பிடிஐ … Read more

கடைசி நொடியில் தலையை திருப்பியதால் உயிர் பிழைத்த ட்ரம்ப்!

வாஷிங்டன்: துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடைசி நொடியில் தலையை திருப்பும் ஸ்லோ மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது … Read more

நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்

காத்மாண்டு: நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலியை, நாட்டின் பிரதமராக அதிபர் ராம் சந்திர பாடேல் நியமனம் செய்தார். நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. இதையடுத்து, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் … Read more

“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” – ட்ரம்ப் தாக்குதல்; பைடன் கருத்து

வாஷிங்டன்: “எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிபர் ஜோ பைடன் இச்சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். பைடனின் இந்த உரை அரிதானதாகக் கருதப்படுகிறது. அந்த … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

வாஷிங்டன்: அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) … Read more