துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பயணம்

துபாய், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கும், சிலர் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கடந்த 12-ந் தேதி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) … Read more

சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு; ஆனாலும் சிறையில் அடைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் உள்ளார். இம்ரான் கான் 2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக, ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த ஆண்டு முதல் சிறையில் உள்ள அவரை, சில வழக்குகளில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இவை தவிர … Read more

அபுதாபியில், முறையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்த தமிழக வாலிபர்: இந்திய தூதரகத்தின் உதவியால் தாயகம் திரும்பினார்

அபுதாபி, அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை சேர்ந்த முகம்மது பாரூக் என்ற வாலிபர் துபாய்க்கு விசிட் விசாவில் வேலை தேடி வந்துள்ளார். அவர் அபுதாபியில் உள்ள உணவகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணியில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு உரிமையாளர் சம்பளம் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உணவக உரிமையாளர் பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து … Read more

33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்

ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். … Read more

காசா முனையில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்: 71 பேர் பலி; 289 பேர் காயம்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் … Read more

கமலா ஹாரிசுடன் தொலைபேசியில் பேசினாரா ராகுல் காந்தி… உண்மை விவரம் என்ன?

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில், வருகிற நவம்பரில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால், பைடன் போட்டியிடுவதற்கான சாத்தியம் பற்றி கட்சியினரிடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு அதற்கான வாய்ப்பு பரவலாக உள்ளது என பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான ராகுல் … Read more

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 71 பேர் பலி, காயம் 289

டெல் அவில்: கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 289 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அங்கு, நகரின் தால் அல்-ஹவா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி … Read more

நைஜீரியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு

அபுஜா: நைஜீரியாவில் இரண்டு மாடி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர். வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு மாடி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 100 க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர். புசா புஜி என்ற சமூகத்திற்குச் சொந்தமான செயிண்ட்ஸ் … Read more

ஊழியரை இருட்டு அறையில் வைத்து பூட்டிய சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

பெய்ஜிங்: ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குவாங்சோ டுயோய் நெட்வொர்க் நிறுவன ஊழியர் லியுலின்சு. பணி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் இவருக்கும் நிறுவனத்துக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. அந்நிறுவனம், லியுவை தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யுமாறு கேட்டுள்ளது. இதற்கு, அவர் மறுக்கவே பணியிடத்தில் உள்ள தனி இருட்டு அறையில் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா தோல்வி

காத்மண்டு, அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள … Read more