உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என அழைத்த ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்கள் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என சொல்லி அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் பைடன் பங்கேற்றார். அப்போது ஜெலன்ஸ்கியை பேச அவர் … Read more

நேபாளத்தில் நிலச்சரிவு | 60+ நபர்களுடன் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்

காத்மண்டு: மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். … Read more

அபுதாபியில் இந்திய சிறுமி அரிய வகை நோயால் பாதிப்பு: கல்லீரலை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய தந்தை

அபுதாபி, அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வரும் இந்தியர் இம்ரான் கான் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஷைமா என்ற மகள் இருந்தார். ஆனால் ஷைமா, குழந்தை பருவத்தில் தோன்றும் ‘பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3’ என்ற கல்லீரலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டில் 4 வயதாக இருக்கும்போது உயிரிழந்தார். அதன் பிறகு ரசியா என்ற மகள் பிறந்தார். தற்போது இந்த சிறுமிக்கு 4 வயதாகும் நிலையில் அவருக்கும் இந்த அரிய … Read more

மத்திய நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய நைஜீரியாவின் தென் மத்திய மாநிலமான பெனுவில் கடந்த செவ்வாய்க்கிழமை (அதாவது 9ம் தேதி) பிற்பகுதியில் உள்ளூர் சமூகத்தின் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தன்ர். பலர் காயமடைந்தனர் … Read more

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்ற பெண் எம்.பி.

லண்டன், இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள். லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா ( வயது 29) வெற்றி பெற்றார். இவரை … Read more

ஸ்டார்லைனர் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்.. விண்வெளி வீரர்கள் நம்பிக்கை

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த மாதம் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட … Read more

எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா அறிவிப்பு

பீஜிங், இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு சீன வெளியுறவு மந்திரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். … Read more

இஸ்ரேல் எச்சரிக்கையால் காசா நகரை விட்டு வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனர்கள்

டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். ஒன்பது மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,345 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 88,295 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் … Read more

பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற பெண் எம்.பி @ பிரிட்டன்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பகவத் கீதை’ மீது சத்தியம் செய்து பதவியேற்றார் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் எம்.பி. அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கடந்த தேர்தல்களில் இருந்துள்ளது. இந்த சூழலில் ஷிவானி அங்கு வெற்றி பெற்றுள்ளார். அவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அங்கு போட்டியிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக லீசெஸ்டர் … Read more

ஸ்டார்லைனரில் பத்திரமாக பூமிக்குத் திரும்புவோம்: சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் சில சிக்கல்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை … Read more