“உங்கள் முழு வாழ்க்கையையும் மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள்” – பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசிய புதின்

மாஸ்கோ: “உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இதனை இந்திய குடிமக்கள் நன்கு அறிவார்கள்” என்று மாஸ்கோவில் பிரதமர் மோடியை வரவேற்றுப் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு … Read more

ரஷியா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு

பீஜிங், உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிராக, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரானது 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தை வழியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலக நாடுகளும் இதனை முன்னிறுத்தி வருகின்றன. எனினும், போரானது முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன், போரில் … Read more

இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 உயிரிழப்பு

சுலாவெசி: இந்தோனேசிய நாட்டின் சுலாவெசி தீவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 45 பேர் மாயமாகி உள்ளனர். இந்தச் சம்பவம் அங்குள்ள கோரோண்டாலோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்டுள்ளது. இதில் சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமல்லாது அதன் அருகில் உள்ள வசித்து வந்த மக்களும் உயிரிழந்தனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம், காவல் துறை, மீட்பு படையினர் என மொத்தம் 164 ஈடுபட்டுள்ளனர். … Read more

பிரான்ஸ் தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி – கூட்டணி அரசு அமைய வாய்ப்பு..?

பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஐரோப்பாவில் நடைபெறும் முக்கிய தேர்தலாகும். நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் பிரண்ட் கூட்டணி போட்டியிட்டன. இந்நிலையில், இறுதி கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் இடதுசாரி முன்னணி கூட்டணி … Read more

காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

டெல் அவில்: காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடந்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் … Read more

ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ, ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.02 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் தொடர்பான … Read more

அமெரிக்கா: குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி, 19 பேர் படுகாயம்

மிச்சிகன், அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலி

காபுல், வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தின் கவாஜா டோகோ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் எரிபொருள் எடுத்து வந்த டேங்கர் லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் | முன்னிலையில் இடதுசாரி கூட்டணி

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த முறை அங்கு வலதுசாரி கூட்டணி கட்சியான நேஷனல் ரேலி தலைமையில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அந்தக் கூட்டணியால் பெற முடியவில்லை என … Read more

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தீ விபத்து: வர்த்தகம் நிறுத்தம்

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல் வலைதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மின்சார சர்க்யூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ … Read more