மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்க்கின்றன – ரஷ்யா

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். “மேற்கத்திய நாடுகள் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு வருகை தருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும், … Read more

இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

டோக்யோ: வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா … Read more

தீவிர வலதுசாரி ஆட்சியா.. தொங்கு நாடாளுமன்றமா..? பிரான்சில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு

பாரிஸ்: ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும், மரீன் லி பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியானது. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தனது அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு … Read more

வங்காளதேசத்தில் கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. 20 லட்சம் மக்கள் பாதிப்பு

டாக்கா: வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான சீரற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது. இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது. இந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்களைத் … Read more

பதவிக்காலம் முடிந்ததும் சைக்கிளில் எளிமையாக வெளியேறிய முன்னாள் பிரதமர்

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் … Read more

ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா – ரசிகர்கள் அதிர்ச்சி

டொராண்டோ, WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜான் சீனா இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற ‘மணி இன் தி பேங்க்’ (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு … Read more

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் வரும் 17-ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை அந்நாட்டில் மத்தியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. ‘வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெறுப்பு பேச்சு … Read more

ஈரான் அதிபர் தேர்தல்: மசூத் பெசெஸ்கியன் வெற்றி

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் அதாவது, 2.55 கோடி வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகள் பெற்றார். சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த முடிவுகளின்படி மசூத் பெசெஸ்கியன் அதிகபட்ச … Read more

இஸ்ரேல் கடும் தாக்குதல்: காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி

டெல் அவில்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து … Read more

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே அந்நாட்டு சுதந்திர தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் ஹண்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன் தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் … Read more