தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவரை கத்தியால் குத்தியவருக்கு 15 ஆண்டு சிறை

சியோல், தென்கொரியாவில் எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் லீ ஜே-மியுங் (வயது 60). இவர் கடந்த ஜனவரி மாதம் தென்கிழக்கு பிராந்தியமான பூசான் நகரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரிடம் கையெழுத்து கேட்பதுபோல் சென்று திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர … Read more

மங்கோலிய பிரதமராக ஒயுன் எர்டீன் மீண்டும் தேர்வு

உலான்பாதர், மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 42 இடங்களில் வென்றது. மற்ற 16 இடங்களில் பல்வேறு சிறிய கட்சிகள் வென்றுள்ளன. இதையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன், மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தினத்தந்தி Related Tags : Mongolia  மங்கோலியா 

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் வெற்றி

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரெய்சியின் திடீர் மறைவை அடுத்து அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில், இதய அறுவை சிகிச்சை நிபுணரும், சீர்திருத்தங்களை ஆதரிப்பவருமான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. “பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதன் மூலம், ஈரானின் அடுத்த அதிபராக மசூத் பெசெஷ்கியன் தேர்வானார்” என்று … Read more

அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி … Read more

பொதுத் தேர்தலில் லேபர் கட்சி அமோக வெற்றி: பிரிட்டன் பிரதமர் ஆனார் கெய்ர் ஸ்டார்மெர்; பிரதமர் மோடி வாழ்த்து

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மெர் பதவியேற்றார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ் என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மொத்தம் உள்ள650 நாடாளுமன்ற … Read more

“மாற்றம் முதல் சேவை வரை…” – பிரிட்டனின் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை

லண்டன்: “உடனடியாக மாற்றத்துக்கான பணி தொடங்குகிறது. அதில் நாட்டுக்கே முன்னுரிமை, கட்சி என்பது இரண்டாம் பட்சமே” என்று பிரிட்டனில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி … Read more

அனைத்து சமூக வலைதளங்களுக்கும் 6 நாட்கள் தடை @ பாகிஸ்தான்

லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் … Read more

பிரிட்டன் தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார் … Read more

“பிரிட்டன் பொதுத் தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்” – ரிஷி சுனக்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது. தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து … Read more

பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

லண்டன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு … Read more