பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவர் ப்குதியில் தமடோலா என்ற இடத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. முன்னாள் செனட் உறுப்பினரான இதயத்துல்லா கான், தமடோலா பகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றபோது, அவருடைய காரை இலக்காக கொண்டு நடந்த இந்த தாக்குதலில், அவர் உயிரிழந்து உள்ளார். அவருடன் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால், மொத்தம் 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பேற்க … Read more

எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர் தகவல்

அஸ்தானா: எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த சந்திப்பு … Read more

பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

லண்டன், பிரிட்டனின் புதிய அரசை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இதுவாகும். … Read more

அமெரிக்க அதிபர் போட்டியில் தொடர்வதாக ஜோ பைடன் தரப்பு அறிவிப்பு

வாஷிங்டன்: ‘அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை பைடன் தரப்பு பிரச்சாரக் குழு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. “உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜனநாயக கட்சியின் வேட்பாளார் நான் தான். நான் போட்டியில் நீடிக்கிறேன். யாரும் என்னை விலகும்படி சொல்லவில்லை. நானும் இதிலிருந்து வெளியேறவில்லை. இறுதிவரை போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி … Read more

சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரிசில்லா மனோகரன் (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தார். வக்கீல் எனக்கூறி கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் போலியாக இறந்ததாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டது உள்ளிட்ட மோசடியில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவர்மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிங்கப்பூர் கோர்ட்டில் பிரிசில்லா மனோகரன் தொடர்பான … Read more

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக இம்ரான் கான் மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு எதிராக ஆப்பாரா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. இந்த வழக்கு பற்றி மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், இம்ரான் கானை … Read more

மக்கள் போராட்டமும், அரசின் அடக்குமுறையும்: கென்யாவில் நடப்பது என்ன? | HTT Explainer

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு, அரசுக்கு எதிராக மக்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் தலைமுறையினர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இதுவரை 39 பேர் உயரிழந்துள்ளனர். 361 பேர் காயமடைந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். இதனை கென்ய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் வரி உயர்வு தொடர்பான மசோதாவை அதிபர் வில்லியம் … Read more

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்… 30 பயணிகள் படுகாயம்

பிரேசிலியா, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஏர் ஐரோப்பா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 325 பயணிகள் இருந்தனர். இந்தநிலையில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென குலுங்கியது. இதில் சில பயணிகள் முன்னால் உள்ள இருக்கைகள் மீது மோதினர். இதனால் பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதில் விமானத்தின் சில பாகங்கள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. இதனால் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். அப்போது … Read more

கஜகஸ்தான் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு வரவேற்பு

அஸ்தானா, கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கடந்த 2 தசாப்தங்களாக மேற்கொண்ட மாநாட்டின் நடவடிக்கைகளை பற்றி தலைவர்கள் மறுசீராய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பலன்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த … Read more

இம்ரான்கானை விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து … Read more