விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில்… இந்திய இளம்பெண் திடீர் மரணம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணான மன்பிரீத் கவுர் (வயது 24) என்பவர் புறப்பட்டு உள்ளார். 2020-ம் ஆண்டு அந்நாட்டுக்கு சென்ற அவர், 4 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தன்னுடைய குடும்பத்தினரை பார்ப்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டு இருக்கிறார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்திருக்கிறார். எனினும், விமானத்திற்குள் வந்த அவர், விமானம் புறப்படும் முன் அணிய கூடிய சீட் பெல்ட்டை அணிந்தபோது, … Read more

காசா: இஸ்ரேல் தாக்குதலில் 20 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 116 பணய கைதிகளில் 30 பேர் உயிரிழந்து விட்டனர் என நம்பப்படுகிறது. இந்நிலையில், காசாவின் வடக்கே ஷெஜாயா … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: ஏர் யூரோப்பாவில் பயணித்த 40 பயணிகள் காயம்

பிரேசிலியா: ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது. திங்கட்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. … Read more

பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கொலெஜியன் நகரில் உள்ள நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி பலியாகினர். இதற்கிடையே கீழே விழுவதற்கு முன்பு அங்குள்ள மின்னழுத்த கம்பி மீது விமானம் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து … Read more

வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டு; கிறிஸ்தவ நபருக்கு பாக்., நீதிமன்றம் மரண தண்டனை

முல்டான்: பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். கிறிஸ்தவரான அந்த நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் … Read more

பாகிஸ்தானில் தொடர் கனமழை: 8 பேர் பலி; 24 பேர் காயம்

பலூசிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 8 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதேபோன்று ஷெரானி மாவட்டத்தில் தனசார் மற்றும் தேரா இஸ்மாயில் கான் பகுதிகளுக்கு இடையே நில சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குவெட்டா மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களை இணைக்கும் தேசிய … Read more

சோதனையின்போது திடீரென சீறிப் பாய்ந்து மலையில் மோதிய ராக்கெட்

பீஜிங்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்குடன் ஒப்பிடும் வகையில் சீனா தனது செயற்கைக்கோள் தொகுப்பை விண்ணில் நிறுத்துவதற்காக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை பயன்படுத்த உள்ளது. இந்த ராக்கெட்டுகளை உருவாக்கும் பணிகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் பயோனீர் என்ற நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த தியான்லாங்-3 என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டின் பல்வேறு நிலைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நேற்று ஹெனான் மாகாணத்தின் காங்யி கவுண்டியில் உள்ள ஏவுதளத்தில், தியான்லாங்-3 ராக்கெட்டின் … Read more

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சிங்கப்பூரில் போராடிய கேரள பெண்ணுக்கு சொந்த ஊர் செல்ல ஜாமீன்

சிங்கப்பூர்: கேரளாவைச் சேர்ந்தவர் அண்ணாமலை கோகிலா பார்வதி (35). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் சிங்கப்பூர் நகரின் இஸ்தானா என்ற பகுதியில் வேறு 2 பெண்களுடன் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளார். இந்த ஊர்வலத்தில் 70-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். போலீஸாரின் முன் அனுமதி பெறாமல் இந்த போராட்டத்தை அவர் நடத்தியுள்ளார். முன் அனுமதியின்றி சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். … Read more

“இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை” – மருத்துவர் தகவல்

டெல் அவில்: பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 80,060 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் பல மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலின் சிறைகளில் … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

சிட்னி: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. அதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான … Read more