இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு, இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் இரா. சம்பந்தன் (வயது 91). இவர் இலங்கை அரசில் எம்.பி.யாக செயல்பட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை இரா. சம்பந்தன் மேற்கொண்டார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இரா. சம்பந்தன் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரா. சம்பந்தன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இரா. சம்பந்தன் … Read more

சுவிட்சர்லாந்தில் வெள்ளம், நில சரிவு: 4 பேர் பலி; 2 பேர் மாயம்

பெர்ன், சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பல இடங்களில் நில சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் வலாய்ஸ் கேன்டன் காவல் துறை வெளியிட்ட செய்தியில், பின் என்ற கிராமத்தில் 52 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிய வந்தது. இதுபற்றிய விசாரணையில், சாஸ்-கிரண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் … Read more

நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

மைடுகுரி: ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான குவோசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்த … Read more

அமெரிக்கா: கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி; விசாரணையில் திடுக் தகவல்

நியூயார்க், அமெரிக்காவின் மிசவுரி பகுதியை சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (வயது 47). இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது. இவருடைய கணவரின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பீட்டர்ஸ், பிறந்த நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதனை பாராட்டி அவர் எதுவும் கூறவில்லை. இதனால், ஆத்திரத்தில் இருந்த மனைவி … Read more

நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி

போர்னோ, நைஜீரியா நாட்டில் விடுமுறை நாளான ஞாயிறன்று, அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த போர்னோ மாகாணத்தில் முதலில், திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதனை தொடர்ந்து, குவோஜா நகரில் உள்ள பொது மருத்துவமனையில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதன்பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது. அந்நாட்டின் போர்னோ மாகாண அவசரகால மேலாண் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பர்கிந்தோ முகமது … Read more

வட கொரியாவில் கே-பாப் இசையை கேட்ட வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சியோல்: சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் அரசுக்கு எதிராகவோ, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகவோ யாரும் எதுவும் பேச முடியாது. அந்த அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கொடூர தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. வட கொரியா மீது மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் … Read more

போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்

வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்லகேம் லேஹை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர் ஆர்யன் ஆனந்த்(வயது 19) என்பவர் சேர்ந்தார். ஆர்யன் ஆனந்தின் கல்வி கட்டணத்திற்கான முழு உதவித்தொகையும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஆர்யன் ஆனந்த் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, உயிருடன் இருக்கும் தனது தந்தைக்கு போலியான இறப்பு சான்றிதழை தயாரித்து, அதனை பல்கலைக்கழகத்தில் ஆர்யன் ஆனந்த் … Read more

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

சாண்டியாகோ, வடக்கு சிலியின் கடற்கரை பகுதிக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 9.51 மணியளவில் வடக்கு சிலியின் கடற்கரை பகுதியில் 75.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் … Read more

ஈரான் அதிபர் பதவிக்கான 2-ம் கட்ட தேர்தல்

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2.45 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மசூத் பெசெஸ்கியன் 1.4 கோடி வாக்குகளை பெற்றுள்ளார். அதே சமயம் சயீது ஜலீலி 90.4 லட்சம் வாக்குகளையும், முகமது பாகேர் 30.3 லட்சம் வாக்குகளையும், முஸ்தபா போர்முகமதி 2.06 வாக்குகளையும் … Read more

மாலத்தீவில் அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் மந்திரி கைது

மாலே, அண்டை நாடான மாலத்தீவின் சுற்றுலா துறை மந்திரி பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் மாளிகையில் மந்திரிக்கு இணையான பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் அதிபர் முகமது மொய்சுவுக்கு பாத்திமா பில்லி சூனியம் வைத்ததாக அவர் மீது புகார் கூறி அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனைநடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய பல பொருட்கள் அங்கு கண்டறியப்பட்டன. அவற்றை கைப்பற்றிய போலீசார் பாத்திமா ஷாம்னாஸ், ஆதம் ரமீஸ் உள்பட 4 … Read more