இந்தோனேசியா-ரஷியா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது. ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. … Read more

விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை: விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் … Read more

மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கிய விமானம்.. 2 பேர் பலி

பொகோட்டா: கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிகோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். உடனடியாக இதுபற்றி அவசர உதவி எண் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு … Read more

மாலத்தீவு அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்ததாக இரு அமைச்சர்கள் கைது

மாலே: மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் வசம் ஒப்படைத்த நாசா!

நியூயார்க்: பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்துள்ளது நாசா. இந்தப் பணிக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் 843 மில்லியன் டாலர்களை பெறுகிறது. விண்வெளியில் உலா வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சிக்கலின்றி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணிக்காக பிரத்யேக விண்கலன் (DeOrbit Vehicle) ஒன்றை ஸ்பேஸ்எக்ஸ் கட்டமைக்க உள்ளது. அதற்கு தான் … Read more

ஜோ பைடன் vs டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் முதல் விவாத நிகழ்வு: விதிமுறைகள் என்னென்ன?

அட்லாண்டா: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் முதல் விவாத நிகழ்வு, இந்திய நேரப்படி நாளை காலை நடைபெறுகிறது. அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்த விவாதம் அட்லாண்டாவில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க குடியேற்றம், கருக்கலைப்பு விவகாரம் மற்றும் காசா நிலவரம் என முக்கியமான பல்வேறு விஷயங்களை குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 81 வயது பைடன் மற்றும் 78 வயது … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்ப் – பைடன் நாளை நேருக்கு நேர் விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நாளை இரவு 9 … Read more

அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே

கான்பெரா: அமெரிக்க ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்பினார். அமெரிக்க ராணுவத்தின் போர்குற்றம், மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க அரசின் நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சே2019-ல் கைது செய்யப்பட்டு லண்டன் … Read more

மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்

நியூயார்க், அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் எய்லா ஆடம்ஸ். இவர் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறார். எப்படி பொது வெளியில் ஆண்கள் மேலாடையின்றி செல்கிறார்களோ அதேபோல பெண்களும் செல்லலாம் என்ற வகையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு மேலாடையின்றி பல இடங்களுக்கு சென்று, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து எய்லா ஆடம்ஸ் கூறுகையில், ‘பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எந்த பயமும் தயக்கமும் … Read more

ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சனா, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த … Read more