குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டு.. பாகிஸ்தானில் சுற்றுலா பயணி எரித்துக் கொலை

பெஷாவர்: பாகிஸ்தானின் சுற்றுலா நகரமான ஸ்வாத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி சுற்றுலாப் பயணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாகாணம் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் சமீபத்தில் வடமேற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்துள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மத்யான் தாலுகாவில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து காவல் … Read more

'இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறோம்' – அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை அந்த இரு நாடுகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். நாங்கள் அதை தீர்மானிக்க முடியாது. உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் … Read more

வடகொரிய அதிபர் கிம் உடன் ஜாலி டிரைவ் சென்ற புதின்… – காரும் பரிசளிப்பு!

மாஸ்கோ: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது காரில் டிரைவ் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது அதிகாரபூர்வ காரான அஃவ்ருஸ் லிமொஸின் காரில் கிம் ஜாங் உன் ட்ரிப் அழைத்துச் சென்றுள்ளார் புதின். மேலும், பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரை கிம் ஜாங் உன்னுக்கு கிஃப்டாக அளித்துள்ளார் … Read more

குவைத் தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது

மங்கஃப்: குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள 6 மாடி கொண்ட குடியிருப்பில் 200 பேர் தங்கி இருந்தனர். இதில் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி இருந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12-ம்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் தமிழ்நாட்டையும் 23 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த காவலர் அறையில் மின் … Read more

இலங்கை சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

கொழும்பு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். தலைநகர் கொழும்புவில் அவர் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனா ஆகியோரை சந்திக்க உள்ளார். அப்போது இரு தரப்பு … Read more

அட்லாண்டிக் கடற்கரை அருகே 91 அகதிகளை மீட்ட மொராக்கோ கடற்படை

ரபாத், வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சிறிய படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். மேலும் சிலர் மொராக்கோ வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். இந்த நிலையில் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேனரி தீவுகளை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்றை அட்லாண்டிக் கடற்கரை அருகே மொராக்கோ கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். அந்த படகில் சுமார் 91 அகதிகள் இருந்தது … Read more

ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு

ரபா, ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். எனினும், ரபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் பலியாகின்றனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரபா நகரின் கிழக்கு பகுதியில் வணிகப் பொருட்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பணியாளர்களின் … Read more

இத்தாலியில் இந்திய தொழிலாளி உயிரிழப்பு; கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் வீசிச் சென்ற அவலம்

ரோம், இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது அங்கு ஆயிரக்கணக்கான இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய புலம்பெயர் தொழிலாளர் சத்னம் சிங்(31) என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது. இதனால் அவர் வலியில் அலறித் துடித்துள்ளார். ஆனால் அவரை … Read more

சார்ஜ் செய்தபோது திடீரென வெடித்துச்சிதறிய லேப்டாப்… இருவர் பலி

லாகூர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஷரீப் புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘லேப்-டாப்’ ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லேப்-டாப்-ன் பேட்டரி வெடித்து, வீட்டில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. இதில் வீட்டில் இருந்த 5 சிறுவர்கள், 2 பெண்கள் உள்பட 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி … Read more

கடும் வெப்பம்: நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 90 இந்தியர்கள் உயிரிழப்பு – தகவல்

ரியாத்: கடும் வெப்பத்தின் தாக்கத்தால் நடப்பு ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தினால் சுமார் 645 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல். இது குறித்து சவுதி அதிகாரி ஒருவர் கூறியதாவது. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், வயோதிகம், வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணத்தால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலரை காணவில்லை … Read more