கடும் வெப்பம்: இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 550 பேர் உயிரிழப்பு

ரியாத்: கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் … Read more

தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு அனுமதி

பாங்காக்: தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். இதன் பின்னணியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் 20 ஆண்டுகால உழைப்பு அடங்கி இருப்பதாக தகவல். அடுத்த 120 … Read more

அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கும் சீனா: இந்தியாவை போல 3 மடங்கு அதிகம்

புதுடெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் உள்ளன. உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களில் 90 சதவீதம் இந்த இரு நாடுகளிடம் உள்ளன. 3-வதாக சீனாவிடம் … Read more

பாரிஸ் கண்காட்சியில் இந்திய ஆயுதங்கள்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் இந்தியாவில் தயாரான ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தன. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூரோசாட்டரி 2024 என்ற பெயரில் ராணுவக் கண்காட்சி கடந்த 17-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றன. டிஆர்டிஓ சார்பில் பினாக்கா மல்ட்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம், எல்சிஏ தேஜாஸ் போர் விமானம், … Read more

மீண்டும் வடகொரிய வீரர்கள் ஊடுருவல்.. துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்த தென்கொரிய ராணுவம்

சியோல்: வட கொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எல்லைகளில் பதற்றத்தை குறைப்பதற்காக 2018-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும், இரு நாடுகளும் தங்கள் வலிமையை காட்டுவதற்கான செயல்களில் ஈடுபடுவதால் சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும், அமெரிக்காவின் கண்டனத்தையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது வட கொரியா. வடகொரியாவை மிரட்டுவதற்காக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. … Read more

100 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு.. புர்கினா பாசோ தாக்குதலுக்கு பொறுப்பேற்ற கிளர்ச்சி குழு

வாகடூகு, ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து அங்கு பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. மேலும் அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் என அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வருகிறது. அதன் ஒருபகுதியாக ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் நைஜர் நாட்டின் எல்லையருகே அமைந்துள்ள மன்சிலா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் தாக்குதல் … Read more

டோங்கா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

நுலுலபா, பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இந்நிலையில், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான ஹிஹிபா நகரில் இருந்து தென்மேற்கே 87 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

விமான விபத்தில் பலியான மலாவி துணை அதிபரின் உடல் சொந்த கிராமத்தில் அடக்கம்

லிலோங்வே, ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா. கடந்த 10-ந் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் தலைநகர் லிலோங்வேயில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.முசுசூ நகரில் அந்த விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தலைநகர் லிலோங்வேக்கு திரும்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. எனவே மாயமான விமானத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் … Read more

பாகிஸ்தான்: வாகனம் கவிழ்ந்து 5 போலீசார் பலி; 3 பேர் காயம்

கராச்சி, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹப் மாவட்டத்தில், போலீசாரை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றது. இந்நிலையில், அந்த வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில், போலீசார் 5 பேர் உயிரிழந்தனர். 3 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், கராச்சியின் சச்சால் பகுதியில் போலீஸ் வாகனம் மீது … Read more

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: ஸ்வீடன் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை: அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்று (ஜூன் 17) அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் உலக நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், … Read more