காலிஸ்தான் ஆதரவாளர் பன்னுன் கொலை முயற்சி: நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்த செக் குடியரசு

வாஷிங்டன்: காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர். இந்தியாவுக்கு எதிராக பன்னுன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து அவரை இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது. இந்த நிலையில், பன்னுனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் இந்தியரான நிகில் குப்தா (52 வயது) ஈடுபட்டதாக அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டிஉள்ளது. இந்த நிலையில் நிகில் குப்தா செக் … Read more

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் எஞ்சின் செயலிழப்பு – அவசர அவசரமாக தரையிறக்கம்

வெலிங்டன், நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று இரவு புறப்பட்டது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். குயின்ஸ்டவுனில் இருந்து விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமான எஞ்சினில் திடீரென தீ பற்றியது. இதனால், விமானத்தில் ஒரு எஞ்சின் முழுவதும் செயல் இழந்தது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித … Read more

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கைபர் பழங்குடி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடத் தொடங்கினர். இந்த தேடுதல் வேட்டையின்போது நடந்த துப்பாக்கி சண்டையில், 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : Pakistan  … Read more

மலாவி முன்னாள் துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்திற்குள் பாய்ந்த வாகனம்.. கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி

லிலாங்வே: மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், நிட்செயு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான நிசிபி கிராமத்திற்கு நேற்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வழிநெடுக அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக, துணை ஜனாதிபதியின் உடலை … Read more

சிங்கப்பூரில் சரக்கு கப்பல் மீது டிரெட்ஜர் மோதியது.. கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரம்

சிங்கப்பூர், சிங்கப்பூரின் சென்டோசா தீவு கடற்பகுதியில் மரைன் ஹானர் என்ற சரக்கு கப்பல் நின்று கொண்டிருந்தது. இது சிங்கப்பூரின் எரிபொருள் வினியோக கப்பல் ஆகும். இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டின் வோக்ஸ் மாக்சிமா என்ற தூர்வாரும் கப்பல் (டிரெட்ஜர்) அந்த வழியாக சென்றது. அப்போது நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது நெதர்லாந்து கப்பல் மோதியது. இதில் அந்த கப்பலின் எண்ணெய் டேங்கர் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த பகுதி வழியாக எண்ணெய் வெளியேறி கடலில் பரவியது. இதனால் … Read more

“டெஸ்லா கார்களையும் ஹேக் செய்யலாம்” – மஸ்குக்கு ராஜீவ் சந்திரசேகர் பதிலடி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மீண்டும் தனது பதிலடியை தற்போது தந்துள்ளார். “அனைத்து மின்னணு இயந்திரங்களையும் ஹேக் செய்யலாம் என மஸ்க் சொல்வது தவறானது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், கால்குலேட்டரையோ, எலக்ட்ரானிக் டோஸ்டரையோ ஹேக் செய்ய முடியாது. அந்த வகையில் இந்திய மின்னணு … Read more

தந்தையர் தின விழாவில் சோகம்.. பழங்கால விமானம் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சினோ விமான நிலைய வளாகத்தில், யாங்க்ஸ் விமான அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பழங்காலத்தைச் சேர்ந்த பல்வேறு விமானங்கள் பராமரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்கால விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இரட்டை என்ஜின் கொண்ட லாக்ஹீட் 12ஏ என்ற அந்த விமானம், புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து … Read more

பன்னுன் கொலை சதி வழக்கு: நிகில் குப்தா அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை … Read more

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான முதன்மை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முதன்மை தேர்தலில் ஏற்பட்ட வாக்குப் பதிவு முறைகேடுகள் குறித்து சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், சிக்கல் … Read more

பாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

கைபர் பக்துன்குவா, பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார். அந்த முதியவர், சிறுமியை திருமணம் செய்ய முயன்றபோது, தகவலறிந்து வந்த போலீசார் … Read more