தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி – எதிர்ப்பு தெரிவித்த சீனா

பீஜிங், இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு தைவான் அதிபர் லாய் சிங்-டே வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் … Read more

இளவரசி கேத் மிடில்டன் இனி அரச கடமைகளுக்கு திரும்ப மாட்டார்- வெளியான பரபரப்பு தகவல்

லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு … Read more

பிரேக் பிடிக்காததால் முன்னால் சென்ற வாகனங்களை இடித்து தள்ளிய லாரி.. 13 பேர் உயிரிழந்த சோகம்

எம்பெயா: தான்சானியா நாட்டின் எம்பெயா பிராந்தியத்தின் எம்பெம்பேலா பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியின் பிரேக் திடீரென பழுதானதால் பெரும் விபத்து ஏற்பட்டது. சிமிக் சரிவுப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற லாரி, முன்னால் சென்ற மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பல மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியது. நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள எம்பெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 … Read more

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

டெல் அவிவ்: காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (வியாழன்) நடத்தியத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் 9 … Read more

“இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது” – கனடா பிரதமர் ட்ரூடோ

ஒட்டாவா: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனது அரசு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கசப்பான உறவு நீடித்து வரும் நிலையில் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார். கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு … Read more

போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளி பயணம்: சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார். இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார். இந்திய நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் பேரி வில்மோரும் பயணித்தார். ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் … Read more

முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்… மெக்சிகோவில் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்

மெக்சிகோ சிட்டி, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் போதை கும்பல்கள், சட்டவிரோத ஆயுத பரிமாற்றம், பயங்கரவாதம், கள்ளநோட்டு புழக்கம் என நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குற்ற சம்பவங்களின் கூடாரமாக விளங்கும் மெக்சிகோவில் நிழல் உலக தாதாக்கள், ரவுடிகள், கூலிப்படையினரை கட்டுப்படுத்த முடியாமல் ஜனநாயகமும், சட்ட திட்டங்களும் செயலிழந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த ஜூன் 2-ந்தேதி மெக்சிகோவில் பொதுத்தேர்தல் நடந்தது. புதிய அதிபர், பிரதிநிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் … Read more

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு ஜோ பைடன், புதின், ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

வாஷிங்டன், நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதி மோடி 3-வது முறையாக … Read more

விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

நியூயார்க், போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர். ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் … Read more

போயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி

கேப் கேனவெரல், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் உதவியுடன், நாசாவின் விமானிகளான பட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை அனுப்ப முடிவு செய்தது. எனினும், ராக்கெட் தொடர்பான கோளாறுகளால் 2 முறை இந்த திட்டம் தள்ளி போனது. 3-வது முறையாக இந்த திட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் இருவரும் குறைந்தது ஒரு … Read more