தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு இத்தாலிய பிரதமர் மெலோனி வாழ்த்து

ரோம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி . இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இத்தாலி மொழியில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும். நம் தேசங்களின், நம் மக்களின் நலனுக்கான பல்வேறு … Read more

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய … Read more

இஸ்ரேலுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் வழக்கில் சேர சர்வதேச கோர்ட்டில் பாலஸ்தீன அரசு விண்ணப்பம்

ஹேக், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7 மாதங்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி விட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதப்படும் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75 … Read more

டிக்-டாக்கில் என்ட்ரி கொடுத்த டிரம்ப்: ஒரேநாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். … Read more

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. புதிய அதிபர், பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிபர் பதவிக்கு ஆளுங்கட்சியான மொரேனா கட்சியைச் சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டார். அவர் 58.75 சதவீத வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெக்சிகோவின் முதல் பெண் … Read more

இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை: மாலத்தீவு முடிவு

மாலே, சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடான மாலத்தீவில் இஸ்ரேலியர்கள் நுழையத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் நடக்கும் போரால் இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவின் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்ட வேண்டும் என மாலத்தீவு எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாலத்தீவு உள்துறை மந்திரி அலி இஹுசன்,”இஸ்ரேலிய பாஸ்போர்ட் … Read more

வன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுதலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இம்ரான் கான் மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சில வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவர் மீதான … Read more

93 வயதில் 5வது திருமணம் முடித்த தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்

வாஷிங்டன், தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் … Read more

ஆழ்கடல் அதிசயம்… பெண் விஞ்ஞானியை மர்ம இடத்திற்கு அழைத்து சென்ற ஆக்டோபஸ்: வீடியோ வைரல்

நியூயார்க், சமூக ஊடகங்களில் ஆச்சரியம் அளிக்கும் பல்வேறு விசயங்கள் பகிரப்படுவதுண்டு. செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என நாம் அறிந்திராத பல வினோத தகவல்களை கொண்டிருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆழ்கடலில் பல அதிசய உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றை பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்குள் செல்வதுண்டு. அப்படி பெண் விஞ்ஞானி ஒருவர் கடலின் ஆழத்தில் சென்றபோது, ஆச்சரியம் தரும் விசயம் ஒன்று … Read more

மாலத்தீவு தடை எதிரொலி: இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்ல குடிமக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதிப்பதாக மாலத்தீவுகள் அரசு அறிவித்ததை அடுத்து, இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்று மாலத்தீவு அறிவித்துள்ளதால், அழகான சில இந்திய கடற்கரைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இங்கே இஸ்ரேலியர்கள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள். அதோடு, மிகுந்த விருந்தோம்பலையும் நீங்கள் … Read more