ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார்

நியூயார்க்: பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

காசா போர் எதிரொலி: இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு திட்டம்

புதுடெல்லி: இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. காசா – இஸ்ரேல் போர் இன்னும் நீடித்துவரும் நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய … Read more

டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

டெல் அவிவ், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த … Read more

இலங்கையில் இடி மின்னலுடன் கனமழை- 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீரற்ற கால நிலையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி … Read more

அமெரிக்காவில் ஜோ பைடனை நோக்கி கண்டன முழக்கம் எழுப்பிய பாலஸ்தீன ஆதரவாளர்கள்

வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முன்னதாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். … Read more

அமெரிக்காவில் நள்ளிரவில் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி, 26 பேர் காயம்

அக்ரோன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் நேற்று நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 26 … Read more

இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய இபு எரிமலை

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள மவுண்ட் இபு என்ற எரிமலை இன்று மீண்டும் வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து அடர்த்தியான சாம்பல் மற்றும் மணல் வேகமாக வெளியேறுகிறது. இந்த சாம்பல் அப்பகுதியில் சுமார் 7,000 மீட்டர் பரப்பளவுக்கு படர்ந்துள்ளது. சுமார் 6 நிமிடங்கள் வரை எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய புவியியல் நிறுவன தலைவர் முகமது வாபித் தெரிவித்தார். எரிமலை சீற்றம் தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு ஒரு தூண் போன்று … Read more

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு

காபுல், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் இன்று காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் … Read more

முடிவுக்கு வருமா இஸ்ரேல் – ஹமாஸ் போர்? – புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் … Read more

'தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' – சீன ராணுவம்

பீஜிங், தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவிடம் இருந்து தைவானை ஒருபோதும் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more