பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு

பீஜிங், சீனாவின் பீஜிங் நகரில் சீன-அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இதில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் துனிசியா உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனாவுடன் வர்த்தக உறவை விரிவாக்கம் செய்வது மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போருடன் தொடர்புடைய பாதுகாப்பு விசயங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான நோக்கங்களுடன் மாநாடு நடைபெற்றது. இதனை சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, … Read more

பாலஸ்தீன ஆதரவு வகுப்பு தோழர்கள் பக்கம் நின்ற இந்திய வம்சாவளி மாணவி @ ஹார்வேர்டு பல்கலை. நிகழ்வு

கேம்பிரிட்ஜ்: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டனர். இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்களின் போராட்டம் இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை கைதும் செய்தது. அந்த வகையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய 13 மாணவர்கள் பட்டம் பெற தடை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அவர்களது வகுப்பில் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ருதி குமார், … Read more

பிரச்சாரத்தின்போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை @ மெக்சிகோ

அகாபுல்கோ: மெக்சிகோ நாட்டில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்ஃபிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை குரேரோ ஆளுநர் உறுதி செய்துள்ளார். வரும் ஜுன் 2-ம் தேதி அதிபர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அந்த நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மேயர் வேட்பாளர் ஆல்ஃபிரடோ கப்ரேரா அருகில் வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் … Read more

சமூக வலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஏஐ புகைப்படம்

காசா: ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது. 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, மத்திய காசாவில் தனது … Read more

காசா விவகாரத்தில் ஐ.நா செயல்பாடு: துருக்கி அதிபர் எர்டோகன் ஆவேசம்

அங்காரா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன். “ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள். இஸ்லாமிய உலகத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவான முடிவை எடுக்க ஏன் தாமதம்? இஸ்ரேல், காசாவுக்கு … Read more

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் விருப்பம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அடிக்கடி வாழ்த்து தெரிவித்து வருபவர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி. இந்நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: தற்போது இந்தியாவில் நடந்து வரும் மக்களவைத் … Read more

சிறையில் 6 ஆயிரம் நாட்கள்… உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர்

நியூயார்க், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்தவர். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்து விட்டார். இந்த துக்கத்தில் ஹென்றி மதுபானம் குடிக்க தொடங்கினார். அவர் முறையாக எந்த அலுவலகத்திலும் பணியாற்றியதில்லை. ஒரேயொரு முறை மோட்டல் ஒன்றில் வேலை … Read more

டோங்கா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

நுலுலபா, பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இந்நிலையில், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் … Read more

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் … Read more

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 28 பேர் பலி, 20 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய … Read more