ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை – ஹமாஸ்

காசா முனை, காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் … Read more

ஒரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் 30 ஆயிரம் பேர்: எங்கே தெரியுமா?

பீஜிங், பொதுவாகவே, பெரிய பெரிய நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சீனாவின் ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் பெயர், ‘தி ரிகென்ட் இண்டர் நேஷ்னல் அப்பார்ட்மெண்ட்’ ஆகும். புகழ்பெற்ற சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் வடிவமைப்பாளரான அலிசியா லூ என்பவர் தான் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். இந்த பிரமாண்டமான கட்டிடம் முதலில் சொகுசு ஹோட்டல் கட்டுவதற்காகதான் கட்டப்பட்டது. … Read more

தனது 50% சொத்துகளை நன்கொடையாக வழங்க சாம் ஆல்ட்மேன் உறுதி!

சான் பிரான்சிஸ்கோ: தனது சொத்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்கினை நன்கொடையாக வழங்க ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உறுதி ஏற்றுள்ளார். இது குறித்த தகவலை கிவிங் பிலெட்ஜ் என்ற தன்னார்வ அமைப்பு உறுதி செய்துள்ளது. அவரது இணையர் ஆலிவர் முல்ஹெரினும் இந்த உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் ஓபன் ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் அந்த நிறுவனத்துடன் சாம் ஆல்ட்மேன் பணியாற்றி வருகிறார். இது தவிர மேலும் … Read more

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்

ஓஹையோ: அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான அவர், சாகச பிரியர். டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் … Read more

இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் ‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஷ்டேக்

காசா: ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா … Read more

“1999-ல் இந்தியா உடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது” – நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: கடந்த 1999-ல் இந்திய தேசத்துடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பிஎம்எல் (நவாஸ்) கட்சியின் பொது கவுன்சிலில் அவர் இதனை தெரிவித்தார். “கடந்த 1998-ம் ஆண்டில் அணு ஆயுத சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டது. அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு வந்து ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆனால், அதனை பாகிஸ்தான் மீறி இருந்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அணு ஆயுத சோதனையை நிறுத்த சொல்லி … Read more

கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் – 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் … Read more

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

புதுடெல்லி: ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது. … Read more

அமெரிக்காவை பந்தாடிய புயல்:குழந்தைகள் உள்பட 19 பேர் பலி; 100 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவை பந்தாடிய புயலுக்கு குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது. அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் … Read more

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் … Read more