இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப் பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் … Read more

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் நீடிக்கும் மர்மம்: டி.வி. வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் அப்துல்லா, மதகுரு அயதுல்லா முகமது அலி உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ந் தேதி விபத்தில் சிக்கியது. இதில் அதிபர் உள்ளிட்டவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த விபத்தைப் பற்றிய பல பரபரப்பு தகவல்களை அங்குள்ள அரசு டி.வி. சானல் ஒளிபரப்பி உள்ளது. நேற்று முன்தினம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் வருமாறு:- ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில், கோடா … Read more

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

மாஸ்கோ: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. தலிபான்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா. அதன் மூலம் வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்த விரும்புகிறது. இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் கஜகஸ்தான் தடை … Read more

“இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” – காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்

நியூயார்க்: ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த … Read more

2-வது உளவு செயற்கைக்கோள்..? வட கொரியாவின் ராக்கெட் திட்டத்திற்கு அண்டை நாடுகள் கண்டனம்

சியோல்: வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளதாக … Read more

தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு

காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று (மே 26) நடத்திய தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், … Read more

மாடியில் இருந்து கீழே விழுந்து டிக்டாக் பெண் பிரபலம் பலி

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜேராவில் வசித்து வந்தவர் ஷனிபா பாபு (வயது 30). கேரளாவை சேர்ந்த இவர், டிக்டாக் பிரபலம் ஆவார். புஜேராவில் உள்ள 19- மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் சனுஜ் பாபு மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். ஷனிபா பாபு அமீரகத்தில் வளர்ந்தவர் ஆவார். நேற்று முன்தினம் அவரது தாயார் துபாயில் இருந்து புஜேராவுக்கு மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது காலை 9 மணியளவில் தனது கணவர், குழந்தைகள், … Read more

சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது

சாண்டியாகோ, தென் அமெரிக்க நாடான சிலியின் வால்பரைசோ பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் சிக்கி 137 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின. சிலர் வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் வனத்துறை அதிகாரியான பிராங்கோ பின்டோ மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த ஊழியர் ஆகியோர் திட்டமிட்டு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து … Read more

சினிமா தியேட்டரில் இளம்பெண்கள் மீது கத்திக்குத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் பிரைன்ட்ரீ நகரில் சினிமா தியேட்டர் ஒன்று செயல்படுகிறது. வார விடு முறையை முன்னிட்டு இங்கு திரைப்படம் பார்ப்பதற்காக ஏராளமானோர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். இதில் 4 இளம்பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பிரைன்ட்ரீ பகுதியில் உள்ள ஒரு ஓட்டலிலும் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இதில் பெண் … Read more

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை – இங்கிலாந்து பிரதமர்

லண்டன், இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய வம்சாவளியான இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற ஜூலை 4-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், அடுத்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவையை … Read more