அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 … Read more

நான் ஏலியன்தான்… நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க்

பாரிஸ்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், பாரிசில் நடைபெற்ற விவா தொழிநுட்ப நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, அவரது தோற்றம் வேற்றுகிரகவாசி போன்று இருப்பதாக (ஏலியன்) சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்டே கிண்டலாக பதிலளித்த எலான் மஸ்க், “நான் ஒரு வேற்றுகிரகவாசிதான். இதை சொல்லிக்கொண்டே வருகிறேன். ஆனால் யாரும் என்னை நம்பவில்லை” என்றார். பூமியில் வேற்றுகிரகவாசிகள் பற்றி நடக்கும் விவாதம் குறித்து பேசிய அவர், … Read more

கார்கிவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழப்பு – 33 பேர் படுகாயம்

கார்கிவ் (உக்ரைன்), கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ஹார்டுவேர் சூப்பர் ஸ்டோரின் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர் என்று கிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான இந்த வெளிப்படையான பகல் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் வலைதளத்தில், “கார்கிவ் மீதான இன்றைய ரஷிய தாக்குதல்கள் பைத்தியக்காரத்தனத்திற்கு மற்றொரு … Read more

நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

ஓஸ்லோ, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நார்வே நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள பள்ளிகளின் வகுப்புகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்பித்தல் முறையை … Read more

இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

நியூயார்க்: இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’ நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ரான் சோமர்ஸ் பேசியதாவது: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் தேர்தல்நடைமுறை வியப்பைத் தருகிறது. உலகமே இந்தியாவின் தேர்தலை உற்று நோக்குகிறது. … Read more

காசாவில் மேலும் 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு

காசா, பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் சுமார் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 250-க்கும் அதிகமானோரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு இழுத்து சென்றனர்.இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது. இந்த … Read more

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி: குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவு

ஒட்டவா, கனடா நாட்டின் சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். … Read more

மீம்ஸ் மூலம் பிரபலமடைந்த ‘கபோசு’ நாய் மரணம்: நெட்டிசன்கள் கண்ணீர்

புதுடெல்லி: மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயும் ஒன்று. அந்த அளவுக்கு பல ரியாக்சன்களை கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்நிலையில் கபோசு நாய் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7:50 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் … Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு

போர்ட் மோர்ஸ்பை, தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்தன. நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் … Read more

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து; தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை – விசாரணையில் தகவல்

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக … Read more