வியட்நாமில் புதிய அதிபர் பதவி ஏற்பு

ஹனோய், அண்டை நாடான வியட்நாமில் அதிபர் வோ வான் துவோங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த சம்பவத்தில் அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே வியட்நாம் அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிபர் பதவியில் இருந்து வோ வான் துவோங் விலகினார். இந்தநிலையில் பொது பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த டோ லாம் … Read more

தைவான் அருகே நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

பீஜிங், தைவானில் உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக சீனாவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹுவாலியன் கடற்கரை அருகே பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : Taiwan  Earthquake  … Read more

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து தூதரை திரும்ப பெற்றது இஸ்ரேல்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல்ராணுவம் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த போருக்கு உலக நாடுகள்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.வும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. … Read more

ஈரான் ஹெலிகாப்டர் விபத்து; தளவாட சிக்கல்களால் விசாரணையில் உதவ முடியவில்லை – அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் நேற்று அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ வருத்தம்; பயணிகள் பகிர்ந்த அனுபவம்

நடுவானில் பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். விமானப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு போயிங் 777-300ER ரக விமானம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வானில் சென்று கொண்டிருந்து. இந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் என … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்: ஒருவர் பலி – பலர் காயம்

பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதால் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-SQ321 என்ற விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் … Read more

ChatGPT-4o குரல் விவகாரம்: ஸ்கார்லெட் ஜோஹான்சனுக்கு அமெரிக்க நடிகர் சங்கம் ஆதரவு

கலிபோர்னியா: ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT-4o மாடலில் இடம்பெற்றுள்ள குரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட தனது குரலை பிரதியெடுத்து பயன்படுத்தி உள்ளதை போல இருப்பதாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்-அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் டெலிவிஷன் மற்றும் ரேடியோ ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நடிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் திரைத்துறையை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபன் ஏஐ விவகாரத்தில் தனது குரல் … Read more

அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத் ஆகிய 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என … Read more

ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? விசாரணையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்தநிலையில், அதிபர் இப்ராகிம் ரைசி … Read more

நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை; பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

ஆம்ஸ்டர்டாம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை மந்திரி யோவாவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் யெஹ்யா சின்வார், முகமது தெயிப் மற்றும் இஸ்மாயில் ஹானியே ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தலைவர்கள் … Read more