சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம்

பிரடிஸ்லாவா, சுலோவேகியா நாட்டின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ (வயது 59). இந்நிலையில், தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில், அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆதரவாளர்களுடனான இந்த சந்திப்பின்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிகோவை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில், பிகோவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுற்றியிருந்தவர்கள் அவரை கார் ஒன்றில் ஏற்றி சிகிச்சைக்காக … Read more

ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: அறக்கட்டளை ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பசிபிக் தீவுவாசிகள் (ஏஏஎன்எச்பிஐ) நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து 6,272 பேர் பங்கேற்றனர். அப்போது ஏஏஎன்எச்பிஐ சமூகம் பெரும் பாகுபாடுக்குள்ளானது தெரியவந்தது. அதன்படி, … Read more

'மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆவார்' – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் நம்பிக்கை

வாஷிங்டன், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஜித் தரார். இவர் கடந்த 1900-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் பாகிஸ்தானின் அரசியல் வட்டாரத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்பார் என சஜித் தரார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;- “மோடி ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அவரிடம் இயல்பாகவே தலைமைப் பண்பு … Read more

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு

சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் இன்று பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் இன்று சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார். 51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார். அவருக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூரில், திட்டமிடப்பட்ட அரசியல் தலைமை … Read more

தேடுபொறியில் மெகா அப்டேட்.. ஏ.ஐ. வழங்கும் பதில்களை பயன்படுத்த தயாராகும் கூகுள்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. அவ்வகையில், பெரும் வரவேற்பை பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). தொழில்நுட்பத்தை கூகுள் தேடுபொறியில் புகுத்தியிருக்கிறது. ஏ.ஐ. உருவாக்கிய பதில்களை தேடுபொறியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேடுபொறிக்கான மிகப்பெரிய அப்டேட்களில் இதுவும் ஒன்று. கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த தகவலை கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை அறிவித்தார். முழுமையாக மேம்படுத்தப்பட்ட ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’ இந்த … Read more

சிறிய ஆயுத உற்பத்தி ஆலையை நிறுவ இந்தியாவுடன் ஆலோசனை: இலங்கை அறிவிப்பு

கொழும்பு, இந்தியாவின் தெற்கே அமைந்த அண்டை நாடான இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டின. இந்த சூழலில், இலங்கையில் புதிய அரசு அமைந்து நிலைமை, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கான பாதுகாப்பு துறை இணை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகூன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இலங்கையில் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான … Read more

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ஹன்ட்லோவா: பொதுமக்கள் மத்தியில் அடையாளம் தெரியாத நபரால் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது . இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த பிரதமர் ராபர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அடையாளம் தெரியாத அந்த நான்கு முறை துப்பாக்கியால் … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி’ – குழந்தைகள் உற்சாகம்

கார்கிவ்: ரஷ்ய போருக்குப் பின்னர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பதுங்குகுழி பள்ளிக்கு (பங்கர் பள்ளி) வந்த குழந்தைகள் தங்கள் ஆசிரியர், நண்பர்களை சந்தித்து உற்சாகம் அடைந்தனர். இரும்புக் கதவுக்கு அருகில் இரண்டு ஆசிரியர்கள் நின்று அவர்களை வரவேற்க காங்கிரீட் படிகளுக்கு கீழே இருக்கும் குண்டு துளைத்த மற்றொரு கதவைக் கடந்து ஒரு தாயும், மகளும் உற்சாகமாக கையை ஆட்டியபடி அங்கிருந்த வகுப்பறைக்குள் நுழையும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. 6 மீட்டர் ஆழத்தில்… … Read more

காசா மோதலில் இந்தியர் பலி: ஐ.நா பணியில் இணைந்த 6 வாரங்களில் நிகழ்ந்த சோகம்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர் பெயர் வைபவ் அனில் காலே. காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் … Read more

“எங்களுக்கு மோடியை போன்ற தலைவர் வேண்டும்” – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர்

பால்டிமோர்: இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் தலைவர் பிரதமர் மோடி என அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் சஜித் தரார் புகழ்ந்துள்ளார். அதோடு பாகிஸ்தானுக்கும் மோடியை போன்ற ஒரு தலைவர் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். “மோடி பிறப்பிலேயே தலைவர். அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் இயல்பாகவே உள்ளன. மிகவும் மோசமான சூழலில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் அவர். பாகிஸ்தானில் அமைதி நிலவுவது இந்தியாவுக்கும் நலன் தரும். இந்தியாவின் அடுத்த பிரதமர் அவர்தான். இளம் மக்கள் … Read more