“தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்” – இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவ நிலைப்பாட்டை மாற்றி அணுகுண்டுகள் தயாரிப்போம்” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இஸ்ரேல் – … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உச்சம் தொட்டுள்ளதால், மக்கள்கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், விலை உயர்வைக் கண்டித்தும் மின்சாரத்துக்கு வரி விலக்கு மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் கோரியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு அவாமி செயற்குழு அழைப்பு விடுத்து இருந்தது. ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை இறங்கியது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் … Read more

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்கு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா நேற்று வாக்களித்தது. காசாவில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா சபையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நாசபையில் மொத்தம் உள்ள 193 உறுப்புநாடுகளில், 153 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. 23 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. ஐ.நா சபையில் பாலஸ்தீனம் தற்போது உறுப்பினராக சேர்க்கப்படவில்லை. அதற்கு பார்வையாளர் … Read more

அமெரிக்காவில் கொடூரம்: இரவில் சாலையில் பெண்ணை தாக்கி, காருக்கு பின்னால் இழுத்து பலாத்காரம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட பெருநகர பகுதி பிரான்க்ஸ். 45 வயது பெண் ஒருவர் அந்த வழியே பின்னிரவு 3 மணியளவில் சாலையோரம் நடந்தபடி சென்றார். அப்போது, மர்ம நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். வெள்ளை துணியால் முகம் தெரியாதபடி மறைத்து கொண்ட அந்நபர், கையில் இருந்த பெல்ட்டால் அந்த பெண்ணின் கழுத்து பகுதியை சுற்றி திடீரென வீசி, அவரை இழுத்துள்ளார். இதில், அந்த பெண் கீழே விழுந்ததும் தரதரவென அவரை அந்நபர் இழுத்து … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  ஜப்பான்  Earthquake  Japan 

பிரேசிலில் கனமழை; பல மணிநேரம் கட்டிட மேற்கூரை மேல் தவித்தபடி நின்ற குதிரை

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்புக்கு இதுவரை 107 பேர் உயிரிழந்து உள்ளனர். 136 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய 1.65 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். … Read more

ஆப்கானிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநாவின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் … Read more

பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம்

வாஷிங்டன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இந்த சூரிய புயலை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் ஒளிக் காட்சிகளாக பார்க்க முடிந்தது. இந்த சூரிய புயல் காரணமாக, தொலைத்தொடர்பு, மின் விநியோகம், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சூரிய புயல் தொடர்பான புகைப்படங்கள் தற்போது … Read more

காலநிலை மாற்றத்தின் தாக்கம்: கடைசி பனிப்பாறையையும் இழந்தது வெனிசுலா

கரகஸ்: வெனிசுலா தேசம் தனது கடைசி பனிப்பாறையையும் இழந்துவிட்டது. அந்த நாட்டின் ஆண்டிஸில் உள்ள சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் காணப்படும் ஹம்போல்ட் பனிப்பாறை மிகவும் சிறியதாக மாறிவிட்டது. அது தற்போது ஐஸ்-ஃபீல்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ‘லா கரோனா’ என்றும் ஹம்போல்ட் பனிப்பாறை அறியப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இது நடந்துள்ளது. இதன் மூலம் அண்மைய கால வரலாற்றில் அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடாகி உள்ளது வெனிசுலா. இந்த சூழலில் காலநிலை மாற்றம் … Read more

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

தைபே, தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் ஹுலியன் கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தைவானின் … Read more