கனடாவில் இந்திய தம்பதி, பேரன் மரணம்.. விபத்துக்கு காரணமான இந்திய வம்சாவளி கொள்ளையன்

டொரன்டோ: கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாமன்வில்லே நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் கடந்த மாதம் 29-ம் தேதி கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் ஒரு சரக்கு வேனில் செல்வதை அறிந்த போலீசார் அந்த நபரை பிடிப்பதற்காக வாகனத்தில் துரத்தினர். அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401-ல் தவறான பாதையில் (ராங் ரூட்) அதிவேகமாக சென்றது. அப்போது, சரக்கு வேன், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு காரில் … Read more

இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி : ரஷியா குற்றச்சாட்டு

மாஸ்கோ, அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற … Read more

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா-இலங்கை

கொழும்பு, இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. இந்த சூழலில் வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் … Read more

“இந்திய தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி” – ரஷ்யா குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில். “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது. இந்திய தேசம் குறித்த புரிதல் மற்றும் … Read more

வடகொரியாவின் ‘கோயபல்ஸ்’ கிம் கி நாம் உயிரிழப்பு

பியோங்யாங்: வடகொரியாவில் ‘கோயபல்ஸ்’ என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபர் கிம் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94. 1966 முதல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குடும்பத்துக்கு மூன்று தலைமுறைகளாக பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் கிம் கி நாம். கிம்மின் தாத்தா கிம் Il சுங் காலம் தொடங்கி, கிம்மின் அப்பா கிம் ஜாங் இல் மற்றும் தற்போதை அதிபர் கிம் ஜாங் உன் வரை … Read more

பிரேசிலில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு

ஸா பாலோ: பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஐந்து மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வரலாறு … Read more

ரஃபாவைக் கைப்பற்ற நினைத்தால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலி மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சில வெளிநாட்டினர் உள்பட பலர் கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல் காசா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. … Read more

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

பிரேசிலியா, பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 3½ லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கின்றனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏற்கனவே 85 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட … Read more

அப்பாவுக்கு குட்பை சொல்லு… 3 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32). இவருடைய மகன் கெய்தன் (வயது 3). இந்நிலையில், சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன் சென்ற அவர் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. கிரிகரின் முன்னாள் கணவர் மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு … Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா

வாஷிங்டன், சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 68 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கின. அவற்றில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி நல்ல பலன் தந்தது. அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய இந்த … Read more