எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

நார்வே, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது. இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முற்போக்கு கட்சியை சேர்ந்த … Read more

'அலெக்சி நவால்னி துணிச்சல் மிக்கவர்' – அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

வாஷிங்டன், ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது. இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை … Read more

மாணவி ஜான்வி கந்துலாவை விபத்தில் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு இல்லை! அதிர்ச்சி தகவல்!

NO Criminal Case : இந்திய மாணவியின் இறப்பு தொடர்பாக காவல்துறையின் அலட்சிய போக்கும் கேலியும் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில் அமெரிக்க அதிகாரி மீது கிரிமினல் வழக்கு இல்லை 

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  ஆப்கானிஸ்தான்  Afghanistan  earthquake 

இங்கிலாந்தில் இந்திய உணவக மேலாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு – 8 பேர் கைது

லண்டன், இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன். இவர் கடந்த 14-ந்தேதி தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேம்ஸ் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நபரை கைது செய்துள்ளனர். … Read more

மனித மூளையில் சிப்… எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!

Neuralink Chip in Human Brain: பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, மூளையில் சிப் பொருத்தி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மூளையில் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், கம்ப்யூட்டர் மௌஸை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறி உள்ளது என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 

லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

டாக்கா, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர். ஐரோப்பாவுக்கு சென்று விட்டால் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு துரதிர்ஷ்டமே காத்திருந்தது. மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் … Read more

இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது – மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பெர்லின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தபோது, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு மத்தியில், இந்திய அரசு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “அனைத்து நாடுகளும் தங்கள் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பிற நாடுகளுடனான உறவை தொடர்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், ரஷியா … Read more

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

துபாய்: துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியாவில் … Read more

ரஷியாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை – உக்ரைன் பிரதமர்

டோக்கியோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், `ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட … Read more