விபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்: தலிபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய போது, தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும், பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்பட பல்வேறு … Read more

பலுசிஸ்தானில் கனமழையால் மேற்கூரை இடிந்து விபத்து – சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், பணியாளர்கள் சிலர் சிறிய அறைகளை அமைத்து தங்கியிருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக அந்த அறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின்போது, தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

நெதர்லாந்தில் நிலவிய பல மணி நேர பதற்றம்: பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு

ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்தின் ஈத் நகரில் பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 4 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நகரின் 150 கட்டிடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து … Read more

“காலநிலை மாற்றம் பற்றி உங்களுக்குப் பாடம் எடுக்கவா?” – குதர்க்க கேள்விகளை தெறிக்கவிட்ட கயானா அதிபர்

புதிய எண்ணெய், எரிவாயுத் திட்டங்களால் கயானா நாடு கரியமில வாயு உமிழ்வை அதிகரிக்கும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து குதர்க்கமாகக் கேள்வி கேட்ட செய்தி ஊடக நெறியாளரை சரமாரியாக கேள்விகளால் துளைத்து கவனம் ஈர்த்துள்ளார் அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலி. இத்தகைய குற்றச்சாட்டுகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சனை என்றும் அவர் சாடியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளது கயானா நாடு. கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் … Read more

இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: ஆதரவும்; எதிர்ப்பும்

காசா: அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் காசா போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் … Read more

தற்கொலைப்படை தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது சீனா

பெஷாவர்: பாகிஸ்தானில் 2 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர். இதில், 5 சீனப் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்தனர். எனவே அணைகட்டும் பணிகளை சீன நிறுவனம் நிறுத்திவிட்டது. இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்,“தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சீன ஒப்பந்த கட்டுமான நிறுவனம் 2 அணைகளின் கட்டமைப்பு … Read more

'இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்' – ஐ.நா. கருத்து

நியூயார்க், இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, … Read more

வீடுகளில் வீணாகும் உணவு மூலம் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கலாம்: ஐ.நா. அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு … Read more

ரஷியாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் – அதிபர் புதின்

மாஸ்கோ, நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3-வது ஆண்டை எட்டிய இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புதின் ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை … Read more

தென்னாப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க் , தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா … Read more