தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது: 25 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காசா: முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் … Read more

போலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்

பெஷாவர்: பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம், கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில், போலீசாரால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் … Read more

நெதர்லாந்து தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் சர்ப்ரைஸ் வெற்றி.. பிரதமர் ஆக வாய்ப்பு

தி ஹேக்: நெதர்லாந்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் திடீர் திருப்பமாக, தீவிர வலதுசாரி கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் (வயது 60) தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் பிவிவி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பிவிவி கட்சி, இந்த தேர்தலில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான … Read more

8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்

தோகா: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை … Read more

மீண்டும் மன்னர் ஆட்சி கோரி போராட்டம் – பாதுகாப்பை பலப்படுத்தியது நேபாள அரசு

காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் … Read more

Navy Veterans: Appeal against Indian death sentence: Qatar court accepts | இந்தியர்களின் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு: கத்தார் நீதிமன்றம் ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தோகா: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை ஆய்வு செய்த பிறகு விசாரணை நடக்கும் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி … Read more

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக … Read more

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா – புதிய வைரஸ் ஏதும் கண்டறியப்படவில்லை என விளக்கம்

பெய்ஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், “தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (the Chinese Center for Disease Control and … Read more