ஹமாஸ் தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் உளவுத் துறை ‘தவறவிட்டது’ எப்படி? – அமெரிக்க நிபுணரின் பார்வை

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் இரட்டை கோபுரமும், பென்டகனும் தாக்கப்பட்டபோது, அது உலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், அப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்கா மட்டும் இல்லை, யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது. அதேபோல், இப்போதும் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்து பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை தாக்கப்பட்டது இஸ்ரேல், தாக்கியவர்கள் ஹமாஸ் குழுவினர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் உளவுத் துறையின் ‘தோல்வி’ பெரும் … Read more

250 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மீட்பு

டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த 250 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை இஸ்ரேல் கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். அப்போது 60 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் காசா பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம்நடத்திய வான் வழி தாக்குதல்களில் 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பு நேற்று அறிவித்தது. காசாவின் … Read more

24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: காசா மக்களுக்கு இஸ்ரேல் கெடு

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதன்காரணமாக காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றுஇஸ்ரேல் ராணுவம் கெடு விடுத்துள்ளது. கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசினர். 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக இஸ்ரேலின் தென் … Read more

காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டாம்: ஹமாஸ் தீவிரவாதிகள் வேண்டுகோள்

காசா நகர்: ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசாவின் வடக்குபகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். இஸ்ரேல் ராணுவத்துக்கு அஞ்ச வேண்டாம். துணிச்சலுடன் செயல்படுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் ராணுவம் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை காசா பகுதி மீது வீசியுள்ளது. இதில் 1,530 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதிமீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்நடத்தி வருவதற்கு பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் … Read more

மிகப்பெரிய தாக்குதலுக்கு இஸ்ரேல்… வியூகம்!  காசாவிலிருந்து மக்கள் வெளியேற உத்தரவு| Israel for the biggest attack… strategy! Order to leave Gaza

ஜெருசலேம், ஹமாஸ் பயங்கரவாதிகளை தரை வழியே முற்றுகையிட்டு முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளதை அடுத்து, வடக்கு காசா பகுதியில் உள்ள, 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை தென் பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2007 முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துஉள்ளனர். கடந்த 7ம் தேதி, இஸ்ரேல் மீது … Read more

உணவு, குடிநீர் இன்றி காசா மக்கள் பரிதவிப்பு

காசா ந;கர்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி ஜெனிபர் ஆஸ்டின் கூறியதாவது: காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. ராணுவதாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து காசாமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர், மின்சாரம், எரிபொருள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அறுவைச் சிகிச்சை … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் | சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு கத்திக் குத்து

பீஜிங்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் முற்றிவரும் சூழலில், சீனாவில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டார். கத்திக்குத்துக்கு உள்ளான அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய மக்கள், யூதர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. தங்களை நோக்கி ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது … Read more

அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானம்| Special flight to rescue Americans

காசா எல்லை அருகே, புறநகர் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் குண்டுகள் வீசப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், பயங்கரவாதிகள் 60 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதி முஹமது அபு அலி உட்பட, 26 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு, பதுங்கு குழியில் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 250 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது. … Read more