இஸ்ரேல் அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் நேரில் சந்திப்பு – ராணுவ உதவிக்கு ஆலோசனை

டெல் அவிவ்: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாட் ஆஸ்டின், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு உலக நாடுகள், இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, ராணுவ உதவியையும் இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இஸ்ரேலை ஒட்டியுள்ள கிழக்கு … Read more

‘24 மணி நேரத்தில் 11 லட்சம் காசா மக்கள் வெளியேற வேண்டும்’ – இஸ்ரேல் எச்சரிக்கையும், ஹமாஸ் நிராகரிப்பும்

காசா: காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது. ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். பேரழிவின் பிடியில் காசா இருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், காசா … Read more

காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல்: இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’

புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருவதால், இரு நாடுகள் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் … Read more

சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

டெல் அவிவ்: சிரியாவின் இரு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ், அலெப்போ சர்வதேச விமான நிலையங்களுக்கு ஈரான் நாட்டில் இருந்து விமானங்களில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்க சிரியாவின் இரு விமான நிலையங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் கடுமையாக சேதமடைந்தன. இதன் காரணமாக டமாஸ்கஸ், … Read more

இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஐ.நா., கவலை| Israel – Hamas War: Israel Wants 1.1 Million Gazans To Move, UN Warns Of Devastating Outcome

காசா நகரம் மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் பலர் பாதித்துள்ளதாகவும், போரால் பொதுமக்கள் பாதிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா., எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா., மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: காசாநகர மக்கள் 10 லட்சம் பேர் மாற்று இடங்களை நோக்கி நகருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது போன்ற நகர்வு நடப்பது சாத்தியமல்ல. இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அத்துடன் போரால் கடும் விளைவுகளை … Read more

காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை

லெபனான்: காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம், போர் ஏற்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா முனை ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹாமஸுக்கு தேவையான … Read more

பயங்கரவாத அமைப்புகளின் கணக்கு நீக்கம்: எலான் மஸ்க் அதிரடி| No Place For Terrorist Organisations: Elon Musks X Removes Pro-Hamas Accounts

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கலிபோர்னியா: பயங்கரவாத அமைப்புகளுக்கு ‛எக்ஸ்’ தளத்தில்(டுவிட்டர்) தளத்தில் இடமில்லை எனக்கூறியுள்ள அந்த தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எக்ஸ் இணையதளத்தின் சிஇஓ லிண்டா யாகரினோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து நேரங்களிலும் பொது மக்கள் கலந்துரையாட, சேவை செய்வதில் ‛எக்ஸ்’ இணையதளம் … Read more

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு; 17 பேரை காணவில்லை – வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேரை காணவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 நாட்களாக ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. தாக்குதல் தொடங்கிய முதல் நாளில் ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கான … Read more

வலுக்கும் போர் | காசாவிலிருந்து வெளியேறிய 4.23 லட்சம் பேர்; குடிதண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் மக்கள்: ஐ.நா. அறிக்கை

டெல் அவிவ்: கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி … Read more