ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் – இசைவிழா நிகழ்விடத்தில் 260 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்

டெல் அவிவ்: காசா அருகே இஸ்ரேலிய பகுதியில் நடைபெற்ற இசை விழாவில் பங்கேற்ற 260 பேரின் உடல்கள் மீட்டுள்ளதாக இஸ்ரேலின் மீட்பு பிரிவான ஷாகா தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அத்துடன், ஹமாஸ் பயங்கரவாதிகள் பலரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் … Read more

கனடா விமான விபத்து: 2 இந்தியர் பலி| Canada plane crash: 2 Indians killed

டொரோன்டோ : கனடாவில் சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர். வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், ‘ஸ்கைக்வெஸ்ட் ஏவியேஷன்’ என்ற விமான பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தமான இரட்டை இஞ்சின்கள் உடைய இலகுரக ‘பைபர் பி.ஏ. – 34’ என்ற விமானம், சில்லிவாக் நகரத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. உள்ளூர் விமான நிலையம் அருகே … Read more

''ஐஎஸ்ஐஎஸ், அல் கயிதா போன்றது ஹமாஸ்'': ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்

நியூயார்க்: பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ், அல் கயிதா போன்றது ஹமாஸ் அமைப்பு என்று ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடங்கியதில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து இரு தரப்பிலும் ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இஸ்ரேலுக்கு எதிரான போர் என்றும், இஸ்ரேல் தற்போது … Read more

இஸ்ரேலில் கேரள பெண் படுகாயம்| Kerala woman injured in Israel

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அங்கு செவிலியராக வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த ஷீஜா ஆனந்த், 41, காயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அங்கு செவிலியராக வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த ஷீஜா ஆனந்த், 41, காயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement –>

அக்.14 வரை ஏர் இந்தியா சேவை ரத்து: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை தொடங்கியதையடுத்து இருதரப்புக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதையடுத்து இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள் இந்திய தூதரகத்தை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் அளிக்கும்’’ என்றார். ஏர் இந்தியா சேவை ரத்து: … Read more

எகிப்தில் துப்பாக்கிச்சூடு : இஸ்ரேலியர்கள் இருவர் பலி | Two Israelis killed in shooting in Egypt

கெய்ரோ : எகிப்தில், சுற்றுலா பயணியர் மீது போலீஸ்காரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேலைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் பலியாகினர். தென்மேற்கு ஆசிய நாடான எகிப்தில் உள்ள சுற்றுலா நகரமான அலெக்சாண்டிரியாவில், செராபியம் பகுதியில் பழங்கால ரோமானிய நினைவுச் சின்னம் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் நாள்தோறும் வருவது வழக்கம். மேற்காசிய நாடான இஸ்ரேலில் இருந்து குழு ஒன்று நேற்று அங்கு சென்றது. அப்போது, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் இஸ்ரேலியக் குழு மீது … Read more

இறந்த ஜெர்மனி பெண்ணின் உடலுக்கு அவமரியாதை: வலைதளங்களில் வீடியோ வைரல்

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இறந்த பெண்ணின் உடலை காலால் மிதித்தபடி நிர்வாணமாக டிரக்கில் தூக்கிச் செல்லும் ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த உடலின் மீது எச்சிலை துப்பி அவமரியாதை செய்கின்றனர். அப்போது, இதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோ மனித … Read more

ஆப்கன் பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழப்பு: 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர்அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்றுபதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் … Read more

தெற்கில் ஹமாஸ், வடக்கில் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்கள் இருமுனை தாக்குதல்: இஸ்ரேல் எல்லைகளில் போர் உச்சகட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் போரிடும் நிலையில், வடக்கு பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருவதால், எல்லை பகுதிகளில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலின் தென் பகுதியில் காசா எல்லையில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், காசா எல்லையின் தடுப்பு வேலிகளை குண்டு வைத்து தகர்த்து, 22 … Read more

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் | ஹமாஸ் அமைப்பின் பின்னணி!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த மோதலில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பின்னணி குறித்து பார்ப்போம். கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டு வீசப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக … Read more