ஆசிய விளையாட்டு: பதக்க பட்டியலில் முன்னேறும் இந்தியா!| Asian Games: India advances in the medal list!

ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை 6 தங்கப் பதக்கங்களோடு 24 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில், பல்வேறு பிரிவில், பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது. நேற்று(செப் 27) வரை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 (5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம்) ஆனது. இன்று(செப்.,28) ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது. துப்பாக்கி சூடு துப்பாக்கி … Read more

ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்: எதற்கு தெரியுமா? | Ahead of Indian Foreign Minister S Jaishankar-Anthony Blinken Meet, US Says Canada Stand Made Clear

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(செப்.,28) நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு … Read more

ஈராக்கில் சோகம் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலி

பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 335 கி.மீ வடமேற்கே உள்ள நினேவே மாகாணத்தில் அமைந்துள்ளது அல்-ஹம்தானியா நகரம். இங்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிறிஸ்தவ திருமணம் நடந்தது. இதையொட்டி மணமக்களின் உற்றார்-உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் மண்டபத்தில் குவிந்திருந்தனர். இதனால் திருமண விழா களைகட்டியிருந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் ஒய்யார நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். மளமளவென பற்றி எரிந்தது அப்போது … Read more

ஈராக்: திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 100 பேர் உயிரிழந்த சோகம்

பாக்தாத், ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர். திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண … Read more

திட்டமிட்ட குற்றங்கள், வன்முறை… அதிகரிப்பு! கனடா மீது ஜெய்சங்கர் பகிரங்க புகார்| Organized crime, violence… on the rise! Jaishankars public complaint against Canada

நியூயார்க் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில், இந்தியா – கனடா இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ”கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிட்ட குற்றங்கள், வன்முறை, பயங்கரவாத செயல்கள் நடந்து வருகின்றன,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில், இந்திய ஏஜன்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக, கனடா … Read more

நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம்

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் … Read more

திருமண நிகழ்வில் தீ விபத்து 100 பேர் பலி; 150 பேர் காயம் | 100 killed in fire at wedding event; 150 people were injured

மொசூல், ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் உடல் கருகி பலியாகினர்; 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் நினேவா மாகாணத்தில் ஹம்தானியா என்னும் பகுதியில் கிறிஸ்துவர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்குள்ள திருமணஅரங்கு ஒன்றில் நேற்று கிறிஸ்துவ திருமணம் நடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அரங்கின் மேல் மாடியில் பற்றிய தீ, சில நிமிடங்களில் அரங்கம் முழுதும் பரவியது. மளமளவென எரிந்த தீயால் … Read more

இலங்கைக்கு வரும் சீன உளவு கப்பல்; அமெரிக்கா கவலை

கொழும்பு, சீனாவின், ‘ஷி யான் 6’ என்ற ஆய்வு கப்பல் அடுத்த மாதம் (அக்டோபர்) இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா இத்தகைய ஆய்வு கப்பல்களை ஆராய்ச்சிகாக அனுப்புவதாக கூறினாலும் உண்மையில் அந்த கப்பல்கள் பிறநாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு அனுப்பப்படும் உளவு கப்பல்கள் குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இந்த … Read more

ஐ.நா. பொதுச்சபையில் 'பாரதம்' என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர்

நியூயார்க், சமீபத்தில், ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றப்போவதாக சர்ச்சை எழுந்தது. ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பிருந்த மேஜையில், ‘பாரத பிரதமர்’ என்ற பெயர் பலகை காணப்பட்டது. மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ‘பாரதம்’ என்ற பெயரே இருந்தது. இந்நிலையில், நேற்று ஐ.நா. பொதுச்சபையிலும் ‘பாரதம்’ என்ற பெயர் எதிரொலித்தது. ஐ.நா. … Read more

நட்சத்திர மண்டலத்தின் அற்புதக்காட்சி: நாசா வெளியிட்டது| NASAs Hubble Telescope Captures Breathtaking Sombrero Galaxy Over 28 Million Light-Years Away

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, விண்வெளியில் உள்ள பல அற்புத காட்சிகளை படம்பிடித்து வருகிறது. அந்த வகையில்,, பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள, அற்புதமாக காட்சியளிக்கும் சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை படம்பிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு நாசா … Read more