3 மாதத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!| US student visa: US Embassy Issues Record 90,000 Visas To Indian Students

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கடந்த ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா தூதரகம் “எக்ஸ்” சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை: உலகளவில் 4ல் ஒரு இந்திய மாணவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது. உயர்கல்வி கனவை நனவாக்க அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஜூன் – … Read more

இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியம்: சொல்கிறார் கனடா பாதுகாப்பு அமைச்சர்| India, Canada: Khalistan: If allegations are proven true…: Canadas Defence Minister amid diplomatic row

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ‘இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது’ என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா … Read more

''இந்தியா உடனான உறவு முக்கியமானது'' – கனடா பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர்

டொராண்டோ: இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில … Read more

ஆசிய விளையாட்டு: இன்றும்(செப்.,25) அசத்தும் இந்தியா!| 19th Asian Games 2023: Air rifle World record India!

ஹாங்சு: ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று(செப்.,25) துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கமும், நால்வர் துடுப்பு படகு போட்டியில் வெண்கலமும் பெற்றுள்ளது. சீனாவின் ஹாங்சு நகரில் ஆசிய விளையாட்டு 19வது சீசன் நடக்கிறது. இன்றும்(செப்.,25) இந்திய வீரர்கள் வேற லெவலில் பட்டையை கிளப்பி வருகின்றனர். துப்பாக்கி சுடுதல் ஆசிய விளையாட்டுப் போட்டி, 10 மீ., ஏர் ரைபிள்(துப்பாக்கி சுடுதல்) பிரிவில், இந்திய அணி தங்கம் வென்றது. திவ்யான்ஷ் சிங், ருத்ரங்காஷ் பாலசாகேப், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் … Read more

நாஜி ஆதரவாளருக்கு கவுரவம்: புதிய சர்ச்சையில் கனடா பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்

ஒட்டாவா: நாஜிப் படைப் பிரிவின் முன்னாள் அதிகாரியை நாடாளுமன்றத்தில் கவுரவித்ததால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், நாடாளுன்ற கீழவை சபாநாயகர் யூத இன மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் போலிவர் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடா வந்திருந்தார். அப்போது அவருடன் வந்திருந்த உக்ரேனியரான நாசிப் படைகளீன் 14வது வேஃபன் கிரண்டியர் பிரிவின் முன்னாள் அதிகாரி நாடாளுமன்றத்தின் … Read more

பென்னு சிறுகோளின் மாதிரிகள் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தது| Samples of Asteroid Bennu successfully reach Earth

டக்வே: விண்ணில் உள்ள, ‘பென்னு’ எனும் சிறுகோளில் இருந்து, ‘நாசா’ முதல்முறையாக சேகரித்த மாதிரிகள், வெற்றிகரமாக நேற்று பூமியை வந்தடைந்தன. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பென்னு எனும் சிறுகோளில் இருந்து மாதிரிகளை சேகரிப்பதற்காக, ‘ஆசிரிஸ் ரெக்ஸ்’ என்ற விண்கலத்தை, 2016ல் விண்ணுக்கு அனுப்பியது. இரண்டு ஆண்டுகள் பயணித்து, 2018ல் பென்னு எனும் சிறுகோளை அடைந்த அந்த விண்கலம், 2020ல் அதன் மேற்பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்தது. அதன் பின் பயணத்தை துவங்கிய விண்கலம், பூமியில் … Read more

பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம்: ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு

பாரிஸ்: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம்காலை 09.00 … Read more

உலகின் 2-வது பெரிய கோயில் அக்டோபரில் திறப்பு

ராபின்ஸ்வில்லே (நியூ ஜெர்சி): அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டி உள்ளனர். 183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்த படியாக நியூ ஜெர்சியில் உள்ள இந்த கோயில் இரண்டாது பெரிய … Read more