இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், … Read more

இங்கிலாந்து: கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்; 50 பேர் காயம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் … Read more

சீனா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து

பீஜிங், சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். ரசாயன ஆலையில் இருந்து வாயு கசிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் … Read more

வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது இதனிடையே, வங்காளதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென ராணுவ தளபதி வாகிர் உல் சமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை எதிர்க்கட்சியாக வங்காளதேச தேசியவாத கட்சி முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான ஹலிதா சியாவுக்கு ராணுவ தளபதி வாகிர் ஆதரவு அளித்துள்ளதாக … Read more

லிவர்பூல் வெற்றிப் பேரணியில் கொடூரம்: கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம் மோதி 50 பேர் காயம்

லண்டன்: இங்கிலாந்தில், லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் ப்ரீமியர் லீக் சாம்பியன்ஷிப் வெற்றி அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது நகர வீதியில் குழுமியிருந்த அந்த அணியின் ரசிகர்கள் மீது மினிவேன் ஒன்று மோதியதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 27 பேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிறுவர்கள். ஒரு நபரும், … Read more

‘இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயார்’ – பாக். பிரதமர்

தெஹ்ரான்: இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் … Read more

‘வகுப்பை தவிர்த்தால் விசாவை இழப்பீர்கள்’ – வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளை தவிர்த்தால், பள்ளிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறினால் உங்களின் ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்கள் பெறுவதற்கான … Read more

‘அனெபல்’ பொம்மை காணாமல் போகவில்லை: வதந்திகளுக்கு மியூசியம் முற்றுப்புள்ளி

ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மை தான் இந்த வரிசைப் படங்களின் முக்கிய கதாபாத்திரம். உலகம் முழுவதும் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமாகிவிட்ட இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் … Read more

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம்!

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் … Read more