மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் … Read more

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் … Read more

10 ஆண்டுக்கான பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு

புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க பாது​காப்பு தளவாட விற்​பனை மற்​றும் இரு நாடு​களுக்​கும் இடையே நெருக்​க​மான பாது​காப்பு மற்​றும் தொழில் … Read more

கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து

அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார். … Read more

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின், இந்த … Read more

கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். கானா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் … Read more

பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!

அக்ரா(கானா): கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் … Read more

மாலி நாட்டில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 3 பேர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு மாலி. இங்குள்ள கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாலியில் உள்ள காயேஸ் பகுதியில் உள்ள வைர தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்திய பயங்கவராதிகள் அல்குவைதா பயங்கரவாதிகளின் ஆதரவு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை … Read more

பாலி தீவில் படகு கடலில் மூழ்கி விபத்து: 2 பேர் பலி.. மாயமான 43 பேரின் கதி என்ன..?

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இது பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று … Read more

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த பயணத்தை அவர் நேற்று தொடங்கினார். டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், அவர் கானா சென்றடைந்தார்.கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் … Read more