5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி … Read more

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

டாக்கா: வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது. இதையடுத்​து, சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யத்​தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இந்த வழக்கை விசா​ரித்த தீர்ப்​பா​யம் ஹசீனா ஆஜராக உத்​தர​விட்​டது. … Read more

ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது

அகமதாபாத்: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார். அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார். மேலும், அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். இதனால் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால் … Read more

கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!

அக்ரா: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரையில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி அவர் … Read more

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய எங்களது ஒப்புதல் அவசியம்: சீன அரசு திட்டவட்டம்

பீஜிங்: அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்குமான பொறுப்பு காடன் போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களையே சாரும் என தலாய் லாமா இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் நடைமுறையில் தங்களது ஒப்புதலைப் பெறுவது முக்கியம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் … Read more

இன்ஸ்டா பயனர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த மெட்டா

செல்போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவும் செல்போன்கள் மாறிவிட்டன. இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களை கவரும் விதமாக புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலகின் … Read more

காசாவில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஹமாஸ்

காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கிய சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘டிராகன்’ விண்கலம் வாயிலாக, ‘ஆக்சியம் மிஷன் 4’ திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.அங்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு … Read more

இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவர்: இலங்கை எச்சரிக்கை

கொழும்பு: இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என இலங்கை எச்சரித்துள்ளது. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் … Read more

ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?

வாஷிங்டன் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில்,ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே … Read more