பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, இந்தியா-அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை … Read more

Pakistan Summons US Consul | அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

லாகூர்: பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர். இந்நிலையில், அவர்களின் கருத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி, அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. லாகூர்: பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர். இந்நிலையில், அவர்களின் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு உலக நன்மைக்கான சக்தி: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையிலான வர்த் தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க தொழிலதிபர்களிடையே பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். … Read more

Cases against Wagner chief will not be dropped | வாக்னெர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படாது

மாஸ்கோ, ‘ரஷ்யாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட, ‘வாக்னெர்’ என்ற தனியார் ராணுவ அமைப்பின் தலைவரான யேவ்கெனி பிரிகோஷின் மீதான வழக்குகள் கைவிடப்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான யேவ்கெனி பிரிகோஷின், வாக்னெர் என்ற தனியார் ராணுவத்தை நடத்தி வருகிறார். புடினுக்காக, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரில், இந்த தனியார் படையும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பிரிகோஷின் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யாவின் முக்கிய … Read more

Sikh attack in Pak: India condemns | பாக்.கில் சீக்கியர் தாக்குதல்: இந்தியா கண்டனம்

புதுடில்லி: பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப், லாகூர், பெஷாவார் ஆகிய மாகாணங்களில் சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பெஷாவரில் , மன்மோகன்சிங் 24 என்ற சீக்கிய இளைஞரை மர்ம கும்பல் கடந்த 24-ம் தேதியன்று தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, டில்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனரை அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன், சீக்கியர்களின் … Read more

அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – வட கொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு சூளுரை

பியாங்யாங்: வடகொரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73-வது நினைவு நாளை அனுசரித்தனர். அப்போது அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று அவர்கள் சூளுரைத்தனர். வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது. “ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் … Read more

செவ்வாய் கிரகம் முதல் ஆழ்கடல் வரை: விதிகளை மீறிய ஸ்டாக்டன் ரஷ்ஷின் மோசமான முடிவு

“செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் நபராக தான் இருக்க வேண்டும் என ரஷ் நினைத்தார்… நாளடைவில் அவரது கவனம் கடலின் பக்கம் திரும்பியது…”. அவர் ஸ்டாக்டன் ரஷ். அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக்கை காணச் சென்று விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் நிறுவனமான ஓசன்கேட்டின் சிஇஓ. அவரது சாசக தேடல் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டாக்டன் ரஷ் புத்தி கூர்மை மிக்கவர், பணக்கார குடும்பத்தில் 1962-ல் பிறந்தவர். எதையும் முன்னின்று நடத்த விரும்புவர். விண்வெளி … Read more

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் குழுமத்துக்கு எதிராக திரண்ட ஊழியர்கள்: காரணம் என்ன?

மான்ஹாட்டன்: ஸ்டார்பக்ஸ் கஃபே குழுமத்தின் அமெரிக்கக் கிளைகளின் ஊழியர்கள் திடீரென அந்நிறுவனத்துக்கு எதிராக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டார்பக்ஸ் கஃபே உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் கொண்ட எலைட் காபிக் கூடம். இது அமெரிக்காவின் சீட்டல் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம். இந்த கஃபேவின் அமெரிக்கக் கிளைகளில் திடீரென ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் குதித்தனர். பணி நெருக்கடி, சம்பள உயர்வு எல்லாம் காரணமல்ல. ஆனால் இதுவும் உரிமைக்கான போராட்டம்தான். ஆம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்பட … Read more