நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது

இடைப்பாடி: நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் (32). விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் இலக்கியா (26). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பஸ்சில் சென்று வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பெற்றோர் … Read more நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிட்ட 537 அறிவிப்புகளையும் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். 110 விதியின்கீழ் அதிமுக ஆட்சி வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு நாளும் இந்திய ஒரு புதிய சாதனை படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியான வானொலி மூலம் இன்று பேசுகையில்; நதிநீர் நாட்டிற்கு மிக முக்கியம். அதனை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. நதிகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை. நதிநீரை வீணாக்காமல், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சி மூலம் … Read more வேலூர், திருவண்ணாமலை நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

இரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே இரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களுக்கு இடையே சிக்கிய மின்கம்பிகளை பேராபத்து நிகழும் முன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்திலிருந்து சரஸ்வதி விளாகம் கிராமத்திற்கு செல்லும் வழியில் தெரு மின்விளக்குகள் ஒளிர்வதற்கான மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்களின் வழியே மின்கம்பிகள் செல்கின்றன. இந்த மின் கம்பிகள் சாலையோரம் உள்ள மூங்கில் மரங்களுக்கிடையே ஒன்றோடொன்று பிணைந்து சிக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மின் கம்பிகள் கடந்த … Read more இரண்டு வருடங்களாக மூங்கில் மரங்களில் சிக்கிய மின்கம்பிகள்: பேராபத்து நிகழும் முன் அகற்ற வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது, அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர் என்று பிரதமர் மோடி பேச்சு தெரிவித்துள்ளார். நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி:  இரண்டாம் சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வார்கள். இதனால், இந்த சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. … Read more ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மலர் அலங்காரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 காரின் ஓட்டுநர்கள் வின்சென்ட் கோபி, சுமந்த் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேருக்கு கொரோனா: 26,032 பேர் டிஸ்சார்ஜ்: 260 பேர் உயிரிழப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.46 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.36 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 28,326 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,52,745 ஆக உயர்ந்தது.* புதிதாக 260 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேருக்கு கொரோனா: 26,032 பேர் டிஸ்சார்ஜ்: 260 பேர் உயிரிழப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

நாகை: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடித்ததாக இலங்கையை சேர்ந்த 10 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.