அனைத்து வகை மொபைல்களுக்கும் இனி ஒரே சார்ஜர்… தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஆலோசனை!

நாம் பயன்படுத்தும் பல மொபைல்களுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில மாடல்களுக்கு சில சார்ஜர் உபயோகப்படாது. ஒருசில குறிப்பிட்ட மாடல்கள் மொபைல் போன்களுக்கு தனித்தன்மையாக சார்ஜர் இருந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்துடன் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் போனை விற்றுவிட்டு வேறு மொபைல் போன் வாங்கினால் புதிதாக சார்ஜர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய … Read more

அதிகரித்து வரும் ஊழியர்களின் மோசடி: எவ்வாறு தடுப்பது?

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர் ஒருவர், அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக வேலை செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாகும். நிறுவனம் கொடுக்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் வேலை செய்யக்கூடாது என்பது வேலை செய்பவர்களின் அறம் சார்ந்த உணர்வு ஆகும். ஆனால் ஒரு சிலர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே அந்த நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவது, மோசடிகளில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. … Read more

வங்கியை கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்.. பிறகு நடந்த விபரீதம்!

இத்தாலியின் பிரபல வங்கி ஒன்றை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டதாகவும் இந்த கும்பல் வங்கியை கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டியதாகவும் கூறப்படுகிறது. வங்கிக்கு எதிரே உள்ள கடையில் இருந்து வங்கி வரை சுரங்கம் தோண்டி கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இத்தாலி காவல்துறை விசாரணை செய்தபோது பல ஆச்சரியமான, அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..! … Read more

இனி பணம் உங்களை தேடி வரும்.. எஸ்பிஐ-யின் வீடு தேடி வரும் சேவை.. எப்படி பெறுவது?

வங்கி துறையில் பற்பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் எளிதில் வங்கி சேவைகளை பெறும் விதமாக பற்பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு சேவைகளை பெறும் வசதிகள் வந்து விட்டன. எஸ்பிஐயிலும் இத்தகைய வீடு தேடி வரும் சேவையானது உள்ளது. இதனை யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். யாருக்கு இந்த சேவை? எஸ்பிஐ-யின் இந்த வீடு தேடி … Read more

இந்தியாவின் மிக நீளமான ரயில்… 295 பெட்டி, 6 இன்ஜின், 3.5 கிமீ நீளம்..!

உலகிலேயே மிக நீளமான 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு ரயில் இயங்கி வரும் நிலையில் இந்தியாவின் மிக நீளமான ரயில் 3.5 கிலோ மீட்டர் நீளத்தில் சுதந்திர தினத்தன்று இயக்கப்பட்டது. சூப்பர் வாசுகி என்ற இந்த ரயிலில் 295 வேகன்கள் மற்றும் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ரயிலில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டது என்பதும் இதுவரை இயக்கப்பட்ட ரயில்களில் இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் இதுதான் என்பதும் … Read more

வெள்ளிக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கா.. 2022ல் வரலாற்று உச்சத்தை தொடலாம்..!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், குறைந்தாலும் இதை வாங்குவோர் எண்ணிக்கை எப்போது குறைவது இல்லை, அந்த வகையில் வெள்ளி விலை 2 வருட சரிவை எட்டிய நிலையில் 2022 ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகரிக்க உள்ளது. இதேவேளையில் பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கத் தங்கம் மற்றும் வெள்ளியில் … Read more

ரேகா ஜுன்ஜுன்வாலா கைவசம் உள்ள 19 பங்குகள்.. சுமார் ரூ.10,000 கோடி.. இனி என்னவாகும்?

இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவரின் பங்கின் நிலை என்ன? என்பதே இதுவரையில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் உள்ள பங்குகளின் நிலை என்ன? என்னென்ன பங்குகள் அவரின் வசம் உள்ளது? அவற்றின் மதிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. கவனம் பெறும் பில்லியன் டாலர் … Read more

கௌதம் அதானி-க்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் கௌதம் அதானிக்கு இந்த Z பிரிவு VIP பாதுகாப்பைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது. Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய … Read more

6 மாத சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் , டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் விலை குறைந்துள்ளது. இது தேவை குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அதன் காரணமாக விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ரெசசன் அச்சம் பல நாடுகளில் இதன் காரணமாக ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் … Read more

40 வருடத்தில் மோசமான சம்பவம்.. இங்கிலாந்து மக்கள் பாவம்.. இந்தியாவின் நிலை பெட்டர்!

உலக நாடுகள் பலவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்தின் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக உச்சம் தொட்டுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் இங்கிலாந்து வங்கிக்கு அழுத்தத்தினை அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடானது ஜூலை மாதத்தில் 10.1% ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசியல் புள்ளியல் தரவு தெரிவித்துள்ளது. … Read more