ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. 1200 கோடி ரூபாய் முதலீடு..!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் ரூ.1,200 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இரு சக்கர வாகன நிறுவனங்கள் அடுத்தடுத்து இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே ஓலா, டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் புதிய தொழிற்சாலை குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி 334% வளர்ச்சி.. எத்தனை நாடுகளுக்கு ஏற்றுமதி தெரியுமா..?!

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தான் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டுள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அறிவிப்பின் படி புதிய தொழிற்சாலை 170 ஏக்கர் பரப்பளவில் சலர்பூர் தொழில்துறை பகுதியில் அமைய உள்ளது மட்டும் அல்லாமல் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உற்பத்தியைத் துவங்கும் எனத் தெரிவித்துள்ளது.

நவீன் முஞ்சால்

நவீன் முஞ்சால்

இந்த மெகா உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றும். மேலும் இந்தியாவின் கிளீன் மொபில்ட்டி தளத்திற்கு மாறுவதற்கு முக்கிய பங்காற்றும் என ஹீரோ எலக்ட்ரிக் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சால் கூறினார்.

ஹீரோ எலக்ட்ரிக் சிஇஓ
 

ஹீரோ எலக்ட்ரிக் சிஇஓ

ராஜஸ்தானில் அமையப்படும் மெசா சைஸ் தொழிற்சாலை கிளீன் மொபில்ட்டி-ஐ உருவாக்குவது மட்டும் அல்லாமல் கிரீன் உற்பத்தி தளமாகவும் உருவாகப் போகிறது. அதிகளவில் ரோபோக்கள் உதவிகள் உடனும், திறமையான உள்ளூர் ஊழியர்கள் இணைந்து உற்பத்தி துவங்கப்பட உள்ளது. மேலும் சோலார் எனர்ஜியை அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளது என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறினார்.

ஹீரோ எலக்ட்ரிக்

ஹீரோ எலக்ட்ரிக்

இந்தப் புதிய தொழிற்சாலையில் இருந்து தான் ஹீரோ எலக்ட்ரிக் தற்போதைய மற்றும் வரவிருக்கும் அனைத்து ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் தயாரிக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ராஜஸ்தான் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hero Electric New EV manufacturing plant setup in Rajasthan; Hero investing Rs 1200 crore MoU signed

Hero Electric New EV manufacturing plant setup in Rajasthan; Hero investing Rs 1200 crore MoU signed

Story first published: Monday, September 26, 2022, 17:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.