சீனாவுக்கும் இதே நிலை தானா.. 28 மாத சரிவில் யுவான் மதிப்பு.. !

ஷாங்காய்: இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து வரலாறு காணாத சரிவினைக் கண்டு வருகின்றது. ரூபாய் மட்டும் அல்ல, ஆசிய நாணயங்கள் பலவும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்து வரும் சீனாவின் யுவான் மதிப்பும், டாலருக்கு எதிராக 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டு, 7.1606 என்ற லெவலில் காணப்படுகின்றது. கடந்த 1 வருடத்தில் யுவானின் மதிப்பு 10.89% சரிவினைக் கண்டும், இது நடப்பு ஆண்டில் … Read more

கேக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட ரெஸ்யூம்.. வித்தியாசமாக வேலை தேடிய இளம்பெண்!

உலகம் முழுவதும் தற்போது வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்பதும் வேலை பார்த்து வரும் ஊழியர்களையே பணி நீக்கம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் புதிதாக வேலை கிடைக்க வேண்டுமென்றால் வித்தியாசமாக ஏதேனும் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைக்க கேக்கில் ரெஸ்யூமை பிரிண்ட் செய்து அனுப்பி உள்ளதாக தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு … Read more

ரூ. 7 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. உஷாரா இருங்க!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த வார சரிவினைக் தொடர்ந்து இன்றும் சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சென்செக்ஸ் 1.64% அல்லது 953.70 புள்ளிகள் குறைந்து, 57,145.22 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 1.72% அல்லது 311.05 புள்ளிகள் குறைந்து, 17,016. 30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இது முன்னதாக சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சி கண்டும், நிஃப்டி மீண்டும் 17,000 புள்ளிகளுக்கு கீழாக வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது. இந்த பலத்த வீழ்ச்சிக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளனர். … Read more

டாடா குழுமம் எடுத்த திடீர் முடிவு.. 29ல் இருந்து 15 ஆகக் குறைக்கும் சந்திரசேகரன் திட்டம்..!

உலகில் அனைத்து பெரும் நிறுவனங்களும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், நீண்ட கால நிலையான வளர்ச்சிப் பாதைக்கு வித்திடவும் பல நிர்வாக மற்றும் மறுசீரமைப்பு முடிவுகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் 150 வருடமாக இயங்கி வரும் டாடா குழுமம், தற்போது மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளது. இந்த முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு எடுத்தது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகரன் தான். சந்திரசேகரனின் முடிவு டாடா குழும முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. … Read more

இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி 334% வளர்ச்சி.. எத்தனை நாடுகளுக்கு ஏற்றுமதி தெரியுமா..?!

இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை எப்போதும் இறக்குமதி தான் செய்யும், ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா உட்படப் பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் ஆயுத ஏற்றுமதியின் அளவு 334 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வர்த்தகத் துறை, வாய்ப்புகள், வருமானம் உருவாகியுள்ளது. விரைவில் இந்தியாவின் முக்கியமான வர்த்தகப் பிரிவாகவும் மாற வாய்ப்பு … Read more

சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் சீரிஸ் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஐபோன் 14 இனி சென்னையிலும் உற்பத்தி செய்து இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு … Read more

அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு என்ன பலன்?

செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம். குறிப்பாக சிலிண்டர் விலை முதல் வங்கி டோக்கனைசேஷன் வரையில் 5 முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..! அடல் பென்சன் யோஜனா அக்டோபர் 1 முதல் அடல் பென்ஷன் … Read more

பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

பெங்களூர்: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இதுவரை இந்திய வரலாற்றில் மறைமுக வரி விதிப்பில் யாரும் பெற்றிடாத மிகப்பெரிய ஷோ காஸ் நோட்டீஸை அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் பெட்டிங் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இதில் பல பிரச்சனைகள் இருப்பதைத் தாண்டி அதிகளவில் வரி ஏய்ப்புச் செய்யப்படுகிறது. அந்த வகையில் கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் தற்போது … Read more

சூப்பர் சான்ஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இனியும் குறையுமா?

Gold price today: தங்கம் விலையானது தொடர்ந்து 1700 டாலர்களுக்கு கீழாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக இன்று சர்வதேச சந்தையில் இரண்டரை வருட குறைந்தபட்ச விலையினை எட்டிள்ளது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? இது வாங்க சரியான வாய்ப்பா? வாருங்கள் பார்க்கலாம். அக்டோபர் மாத கான்ட்ராக்டில் எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், இதுவும் நடப்பு மாத கான்ட்ராக்டில் இருக்கும் ஆர்டர்களை முடித்து கொள்ள வழிவகுக்கலாம். இதனால் அடுத்த … Read more

ரூ.25 கோடி பரிசு விழுந்தும் நிம்மதியில்லை.. லாட்டரியில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் வருத்தம்..ஏன்?

கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி லாட்டரி விற்பனை நடைபெற்று வந்ததில். இதில் கேரளாவில் ஆட்டோ ஒட்டுனர் ஒருவருக்கு 25 கோடி ரூபாய் பரிசும் விழுந்தது. ஆரம்பத்தில் பரிசு பெற்ற ஓட்டுனர் சந்தோஷத்தில் முதலில் கிடைத்த பரிசினை வைத்து வீடு கட்டுவேன். அதோடு கடன்களை திரும்ப செலுத்துவேன். என்னால் முடிந்த அளவு உறவினர்களுக்கு உதவுவேன் என கூறியிருந்தார். இதுல முதலீடு செய்யுங்க.. இதைமட்டும் செய்யாதீங்க.. ரூ.25 … Read more