தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்
திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது … Read more