இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்வதே உத்தர பிரதேச தேர்தல் – அமித்ஷா

புதுடெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக உள்துறை மந்திரியும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான அமித்ஷாவும் வாக்கு சேகரிப்பில் உள்ளார். இந்நிலையில், மதுராவின் பிராஜ் பகுதியில் நேற்று வாக்காளர்கள் மத்தியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். … Read more

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு – வீணா ஜார்ஜ்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 6 சதவீதம் பேருக்கு டெல்டா வகை திரிபு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி வீணா ஜார்ஜ், கேரளாவில் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகிவிட்டது. கொரோனா நோயாளிகளின் 94 சதவீத மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம், வழக்கமாக நடைபெறும் அலுவலான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, … Read more

தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? மாணவி லாவண்யாவின் புதிய வீடியோ

அரியலூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா (வயது 17), கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.  இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை … Read more

பட்ஜெட் பணிகள் தொடக்கம் – கொரோனா பரவலால் அல்வா கிண்டவில்லை

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதன் தொடக்க நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடக்கிறது. இதில் நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். … Read more

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – 9 லட்சத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை

வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.   இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.44 கோடியைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவில் … Read more

கொரோனா பாதிப்பை உணர்ந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட கனடா பிரதமர்

டொரண்டோ: கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று எனது கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே … Read more

பக்தி முழக்கத்துடன் கொரோனா காலத்திலும் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

நிலமகள் பச்சை பட்டு உடுத்தியது போன்ற அடர்ந்து படர்ந்த இயற்கை வனப்பை கொண்டது கேரள தேசம். பார்ப்போரின் கண்களை கொள்ளையடிக்கும் அனைத்து அம்சங்களும் கொட்டிக்கிடக்கும் சொர்க்கபூமி என்றும் சொல்லலாம். அதனால் தான் இன்றைக்கும் அது கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிறது. உல்லாசமாக படகு சவாரி செய்ய வேண்டுமா?, கடற்கரையில் படுத்து சூரிய குளியலை கொண்டாட வேண்டுமா?, உயர்ந்து நிற்கும் அணைகளை பார்க்க வேண்டுமா?, கண்ணையும், உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண தோட்டங்களை பார்க்க வேண்டுமா? அனைத்தையும் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10 ராணுவ வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி அந்நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்கு சில பயங்கரவாத அமைப்புகளும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.   இந்நிலையில், நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தின் கேச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி … Read more