சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற  பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பத தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் மதீனா அருகே ஒரு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதியதில் 42 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்றவர்கள்,  ‘மெக்காவில் இருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 42 … Read more

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்   என்றும், இதன் காரணமாக,   சென்னை உள்பட  கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக … Read more

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு  வலியுறுத்தி வரும்  டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர்  அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும்  பாமக, வரும் டிச. 17-ந்தேதி  அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட‘ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து  பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் … Read more

எஸ்ஐஆர்: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி  காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான  ராகுல்காந்தி  டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026)  தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியை மேற்கொணடு வருகிறது. இந்த பணிகளை  திமுக உள்பட இண்டியா  கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து … Read more

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை  நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட  ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு … Read more

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக  ஜேடியு தலைவரான நிதீஷ் குமார்  10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.  இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது,  அமைச்சரவையில்  பாஜகவுக்கு  முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரது … Read more

4ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது  மக்களை தேடி மருத்துவம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் – தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை … Read more

ரூ.97 கோடி செலவில் சென்னை அண்ணா நகரில் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக  ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட  புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். சென்னை அண்ணா நகரில் வீடில்லாதோருக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ₹.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் TNHB என அழைக்கப்படும் கட்டட மற்றும் … Read more

மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில்,  பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெலுங்கானா சார்லபள்ளி – கோட்டயம் சிறப்பு ரயில் நவ.24ம் தேதியும், மறுமார்க்கத்தில் ரயில் நவ.25ல் புறப்படும். சார்லபள்ளியில் இருந்து  நாளை முதல் ஜன. 13 வரை (செவ்வாய் மட்டும்) காலை 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் நவ.20 முதல் … Read more

தமிழ்நாடு எஸ்ஐஆர்: கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் (SIR) பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (Booth Agents) நாளொன்றுக்கு 50 கணக்கெடுப்பு … Read more